தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தூத்துக்குடியில் பரபரப்பு; முத்தையாபுரம் போலீஸ் ஸ்டேஷனில் ஓட்டல் உரிமையாளர் தீக்குளித்து தற்கொலை

தூத்துக்குடி:தூத்துக்குடி முத்தையாபுரம் போலீஸ் நிலையத்தில், சொந்த பிரச்னையின் போது பறிமுதல் செய்யப்பட்ட செல்போனை வாங்கச் சென்ற ஓட்டல் உரிமையாளர் தீடிரென்று உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். தூத்துக்குடி, முள்ளக்காடு, காந்தி நகரைச் சேர்ந்தவர் சுவிசேஷராஜ் (42). ஸ்பிக்நகரில் பிரியாணி கடை நடத்தி வந்தார். இதில் நஷ்டம் ஏற்பட்டதால் கூலி வேலைக்கு சென்று வந்தார். இந்நிலையில் கடந்த 1ம் தேதி இவருக்கும், இவரது உறவினர்களான மாசானமுத்து, தீபக்ராஜ், பாண்டி, கனி ஆகியோருக்கும் இடையே அடிதடி, தகராறு ஏற்பட்டது. இதில் மாசானமுத்து தரப்பினர், சுவிசேஷராஜை இரும்புக் கம்பியால் சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

Advertisement

இதுகுறித்து முத்தையாபுரம் போலீசார் மாசானமுத்து தரப்பினர் மீது அடிதடி வழக்குப்பதிவு செய்தனர். அவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று சுவிசேஷராஜ் வலியுறுத்தி வந்தார். இதற்கிடையே சுவிசேஷராஜை, மாசானமுத்து தரப்பினர் தாக்கிய சம்பவத்தில் அவரது செல்போனை உடைத்ததோடு, பைக்கையும் அடித்து சேதப்படுத்தியுள்ளனர். ஆனால் இதற்கு போலீசார் தனி வழக்கு பதிவு செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து இந்த 2 சம்பவங்களையும் குறிப்பிட்டு தனி வழக்காக பதிவு செய்ய வேண்டும் என்று கூறுவதற்காக நேற்றிரவு 10 மணிக்கு சுவிசேஷராஜ், முத்தையாபுரம் போலீஸ் நிலையத்திற்கு சென்றார். அங்கிருந்த இன்ஸ்பெக்டரிடம் மாசானமுத்து தரப்பினர் மீது தனது பைக்கையும், செல்போனையும் உடைத்து சேதப்படுத்தியதற்கு வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

அதற்கு இன்ஸ்பெக்டர் ஜீவமணி தர்மராஜ், சம்பவங்கள் தான் முதல் தகவல் அறிக்கையில் வருகிறதே என்று கூறியுள்ளார். ஆனாலும் தனி வழக்கு என்பதில் சுவிசேஷராஜ் உறுதியாக இருக்கவே, அதற்கு நாளை (இன்று) காலை ஸ்டேஷனுக்கு வந்து புகார் அளியுங்கள் என்று இன்ஸ்பெக்டர் அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில் சுவிசேஷராஜ், முத்தையாபுரம் போலீஸ் நிலைய வாசல் முன்பு தான் ஏற்கெனவே கொண்டு வந்திருந்த மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டு, ஸ்டேஷனுக்குள் உடலில் தீ கொழுந்து விட்டு எரிய நடந்தே சென்றார். இதைப் பார்த்து பதறிய போலீசார் அவரது உடலில் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்து அவரை மீட்டனர். பின்னர் மயங்கிச் சரிந்த அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சுவிசேஷராஜ் இன்று காலை பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து தூத்துக்குடி எஸ்பி ஆல்பர்ட் ஜான், ஏஎஸ்பி மதன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி முத்தையாபுரம் போலீஸ் நிலையம் முன்பு ஓட்டல் உரிமையாளர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம், முள்ளக்காட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement