தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூ.3.5 கோடி வலிநிவாரணி மாத்திரைகள் பறிமுதல்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூ.3.5 கோடி வலிநிவாரணி மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இலங்கைக்கு கடத்தப்பட இருந்த 2500 கிலோ பீடி இலைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். வலிநிவாரணி மாத்திரை, பீடி இலைகளை பதுக்கி வைக்க பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. இலங்கைக்கு கடல் வழியாக கடத்த முயன்றவர்களை கடலோர காவல் நிலைய போலீசார் தேடி வருகின்றனர்.
Advertisement
Advertisement