தூத்துக்குடி எஸ்பி என்ஐஏவுக்கு மாற்றம்
Advertisement
தூத்துக்குடி: தூத்துக்குடி எஸ்பிஆல்பர்ட் ஜான், தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார். இதுகுறித்து ஒன்றிய உள்துறை அமைச்சக செயலாளர், தமிழ்நாடு தலைமை செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘‘தேசிய புலனாய்வு முகமையில் ஏற்பட்டுள்ள எஸ்பி காலியிடத்திற்கு தூத்துக்குடி எஸ்பி ஆல்பர்ட்ஜான், டெபுடேசன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எனவே அவர் இந்த புதிய பொறுப்பை ஏற்றுக்கொள்ள வசதியாக, தூத்துக்குடி எஸ்பி பொறுப்பிலிருந்து அவரை விடுவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.’’ என்று கூறப்பட்டுள்ளது.
Advertisement