தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தூத்துக்குடி சிப்காட்டில் ரூ.1,156 கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்: அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

தூத்துக்குடி சிப்காட்டில் ரூ.1,156 கோடி முதலீட்டில் உணவுப் பொருட்கள் தயாரிக்கும் ஆலையை ரிலையன்ஸ் நிறுவனம் அமைக்கிறது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா முன்னிலையில் கையெழுத்தானது. ரிலையன்ஸ் நிறுவனம் என்பது மும்பையை தலைமையிடமாகக் கொண்ட ஒரு இந்திய பன்னாட்டு நிறுவனமாகும் .

Advertisement

இதன் வணிகங்களில் எரிசக்தி , பெட்ரோ கெமிக்கல்ஸ் , இயற்கை எரிவாயு , சில்லறை விற்பனை , பொழுதுபோக்கு , தொலைத்தொடர்பு , வெகுஜன ஊடகங்கள் மற்றும் ஜவுளி ஆகியவை அடங்கும். இந்தியாவின் மிகப்பெரிய பொது நிறுவனமான ரிலையன்ஸ் , உலகளவில் 86வது பெரிய நிறுவனமாகும். இத்தகைய நிறுவனம் தமிழ்நாட்டில் தற்போது முதலீடு செய்துள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் 24.09.2025 இன்று கையெழுத்தானது.

இது குறித்து, அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா வெளியிட்டுள்ள எக்ஸ் பக்கத்தில், தூத்துக்குடி அல்லிகுளம் சிப்காட்டில் 60 ஏக்கரில் உணவுப் பொருட்கள் தயாரிப்பு ஆலை அமைகிறது. உற்பத்தி மையத்தில் பிஸ்கட், மசாலாப் பொருட்கள், சமையல் எண்ணெய் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் தயாரிக்கப்படும். இத்தகைய சிப்காட்டில் அமைக்கப்படும் புதிய ஆலையால் 2000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

 

Advertisement