தூத்துக்குடியில் மேலும் ஒரு தொழில் பூங்கா அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரியது சிப்காட்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் மேலும் ஒரு தொழில் பூங்கா அமைக்க சிப்காட் சுற்றுச்சூழல் அனுமதி கோரியது. ரூ.667 கோடியில் அமைய உள்ள தொழில்பூங்கா மூலம் 17,200 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கக் கூடும். ராமசாமிபுரம், கீழத்தட்டப்பாறை, மேலத்தட்டப்பாறை, உமரிக்கோட்டை, பேரூரணி, தெற்கு சிலுக்கன்பட்டி கிராமங்களில் அமைய உள்ளது. 1,967 ஏக்கரில் அமையவுள்ள தொழில் பூங்காவுக்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி சிப்காட் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.