தூத்துக்குடி எட்டையபுரம் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி அறிவித்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்..!!
சென்னை: தூத்துக்குடி எட்டையபுரம் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடி மாவட்டம், எட்டையாபுரம் வட்டம், கருப்பூர் கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலைக்கு அருகில் உள்ள தரிசு நிலத்தில் (29.08.2025) மாலை 03.00 மணியளவில் எதிர்பாராதவிதமாக தீ பிடித்து, பட்டாசு ஆலைக்கு சொந்தமான இடத்தில் அமைக்கப்பட்டுள்ள பணியாளர்கள் தங்குமிடம் மற்றும் அருகில் உள்ள இடங்களுக்கு தீ பரவியதில் ஏற்பட்ட வெடிவிபத்தில் விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், விஸ்வநத்தம் கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி (வயது 57) த/பெ.பெரிய வேலுசாமி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். இந்த விபத்தில், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நான்கு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.