திருவிடைமருதூர் அருகே கார் - லாரி மோதிய விபத்தில் கணவன் - மனைவி உயிரிழப்பு!!
தஞ்சாவூர்: திருவிடைமருதூர் அருகே கார் - லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில், 60 ஆம் திருமணத்திற்காக திருக்கடையூர் சென்று கொண்டிருந்த கணவன் - மனைவி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நரசிங்கன்பேட்டை அருகே இன்று காலை நடந்த விபத்தில் காரில் பயணித்த பொள்ளாச்சியைச் சேர்ந்த சுப்பிரமணியன் (60), மனைவி கலாவதி (59) இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் கார் ஓட்டுநர் உள்பட மூவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Advertisement
Advertisement