திருவாரூர் அருகே வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்த ஒன்றரை வயதுக் குழந்தையை கடித்துக் குதறிய நாய்..!!
திருவாரூர்: திருவாரூர் அருகே வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்த ஒன்றரை வயதுக் குழந்தையை வெறிநாய் ஒன்று கடித்து குதறியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரை சேர்ந்த முகமது அபிதா இவர் வெளிநாட்டில் வசித்து வருகிறார். இவரது மனைவி சுல்தான் பீவி இவர்களுக்கு ஒன்றரை வயது குழந்தை உள்ளது. குழந்தை காலையில் தொட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த போது அப்பகுதியில் இருந்த நாய் ஒன்று வீட்டினுள் புகுந்து குழந்தையை கண்டித்துள்ளது. உடனடியாக அருகில் இருந்த குழந்தையின் பாட்டி மல்லிகா பீவியும் குழந்தையை காப்பாற்ற முயன்றபோது அவரையும் நாய் கடித்தது.
இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் இருவரையும் உடனடியாக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு வருகிறார். நன்னிலம் பகுதியை சேர்ந்த மனிஷா (7), அழகிரி காலனியை சேர்ந்த ஹரிஹரன்(12), மற்றொரு பகுதியை சேர்ந்த லக் ஷனா (3) என ஒரே நாளில் 4 குழந்தைகளும் ஒரு மூதாட்டியும் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் வெறிநாயை பிடிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. வீட்டினுள் நுழைந்து நாய் கடிப்பது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.