திருவாரூரில் தண்ணீரில் மூழ்கி சம்பா பயிர்கள் அழுகியதால் விவசாயிகள் வேதனை
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே சுமார் 500 ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி அழுகிவருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளில் கடைமடை பகுதி என்பதால் ஆறுகளில் வெங்காயம் தாமரை அழுவியது. இந்த நிலையில், கோடைகாலம் முடிந்து தீவிரமாக சம்பா நெல்பயிர் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். ராஜ கொத்தமங்கலம், ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சில தினங்களில் முன்பு கனமழை பெய்த காரணமாக வாய்க்காலில் தண்ணீர் வெளியேற முடியாமல் விளைநிலங்களில் சுமார் 20 நாட்கள் சம்பா நெல்பயிர்கள் முற்றிலும் தண்ணீரில் மூழ்கி அழுவியது.
இந்த நிலையில், விவசாயிகள் உடனடியாக சுமார் 3 கி.மீ. தூரத்தில் தாங்களாக ஆகாயத்தாமரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அனாலும் தண்ணீர் வடிவத்தில் பெரும் தேக்கம் ஏற்பட்டுள்ளதால் உடனடியான பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகமும் ஈடுபட்டனர். ஆகாயத்தாமரை தண்ணீரை வடிய வைத்தால் மட்டுமே அடுத்த விளைநிலங்களில் பாதிக்காமல் காக்கப்படும் நிலையுள்ளது. வெள்ள காலங்களில் வடகிழக்கு பருவமழை இன்னும் தொடங்காத நிலையில், சில தினங்களுக்கு பெய்த சாதாரண மழைக்கு தண்ணீர் வடியாமல் சுமார் 500 ஏக்கர் சம்பா நெல்பயிர் பாதிக்கப்பட்டுள்ளது. உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட அனைத்து ஆறுகளில், வாய்க்கால்களில் வெள்ளம் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.