திருவண்ணாமலை தீபத் திருவிழா: 24 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைப்பு
தி.மலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா வருகின்ற 24ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதைத்தொடர்ந்து, 10 நாட்கள் தீபத்திருவிழா உற்சவம் நடைபெறும். முக்கிய நிகழ்ச்சியான மகா தீபம் டிசம்பர் 3ம் தேதி மாலை ஏற்றப்படும். அன்று அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபமும் மாலை 6 மணிக்கு 2,688அடி உயரமுள்ள மலையின் உச்சியில் மகாதீபமும் ஏற்றப்பட உள்ளது. இந்த நிலையில், தீப விழாவை முன்னிட்டு அண்ணாமலையார் கோயிலில் அதற்கான முன்னேற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்;
வரும் 24ம் தேதி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா வருகின்ற 24ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.30ம் தேதி மகாரதம், டிச.3ல் பரணி தீபம் மற்றும் மகாதீபம், டிச.4 முதல் 6 வரை தெப்பல் திருவிழா, 4ம் மாலை 7.58 முதல் 5ம் தேதி காலை 5.37 வரை பெளர்ணமி பூஜை நடைபெறும்.
முக்கிய துறைகள் - 20
துறை பணிகள் ஒருங்கிணைப்பு குழுக்கள் 21
வாகன நிறுத்துமிட வசதிகள் :
24 தற்காலிக பேருந்து நிலையங்கள் (Main -11, Spare - 13)
2,325 பேருந்துகள் நிறுத்தம் செய்யலாம்
130 கார் நிறுத்துமிடங்கள்
Corporation -109 [Free - 87, Paid - 22],
Rural - 21 [Free - 17, Paid - 4]
19,815 கார்கள் நிறுத்தம் செய்யலாம்
அனைத்து இலவச தற்காலிக பேருந்து/ கார் நிலையங்களிலும் குடிநீர் வசதி, கழிப்பறைகள், விளக்குகள், மேற்கூரைகள், PAS, காவல் மையம், தற்காலிக மின் இணைப்பு / Generator, வழிகாட்டு பலகைகள், தீ தடுப்பான்கள், அறிவிப்பு பலகைகள் உள்ளிட்ட வசதிகள்
மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை : Reserve stock of soil, gravel and wet mix, adequate drains, etc.,
போக்குவரத்து வசதிகள் :
* 4,764 சிறப்பு பேருந்துகள் - 11,293 நடைகள் இயக்கப்பட உள்ளது.
* அருகில் உள்ள நகரங்களுக்கு (வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி) 200 தனியார் பேருந்துகள் - 24 மணி நேரமும் இயக்கம்
* 500 ஆந்திர மாநில பேருந்துகள், 20 கர்நாடக மாநில பேருந்துகள்
* கடந்த ஆண்டை விட 20% கூடுதல் பேருந்துகள்
முன்னெச்சரிக்கை நடவடிக்கை கடந்த ஆண்டு அனுபவம் அடிப்படையில் 03.12.2025 மற்றும் 04.12.2025 ஆகிய தேதிகளில் அதிகாலை 03.00 மணி முதல் 06.00 மணி வரை தற்காலிக பேருந்து நிலையங்களில் குறைந்தபட்சம் 40 பேருந்துகள் (Spare Buses) தயார் நிலையில் வைத்திருத்தல்.
தற்காலிக பேருந்து நிலையம் மற்றும் கிரிவலப் பாதை இடையே 310 Shuttle Services (90 Mini Buses @ Rs.10/- 220 School Buses Free of cost) இயக்கப்பட உள்ளது.
அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து கூடுதலாக 90 Mini Buses @ Rs.10/-பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு கார் நிறுத்துமிடங்கள் முதல் Shuttle Services இயக்கப்பட உள்ளது.
அனைத்து வாகன நிறுத்துமிடங்களில் Google Point Display தகவல் பலகைகள்
முன்னெச்சரிக்கை நடவடிக்கை : கடந்த ஆண்டு அனுபவம் அடிப்படையில் இரவு நேரங்களிலும் (Shuttle Services) இயக்க கால அட்டவணை தயார் செய்யப்பட்டுள்ளது.
தற்போது 16 ரயில்கள் இயக்கம் செய்யப்படும் நிலையில், கூடுதலாக 16 சிறப்பு ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு முதன் முறையாக பின்வரும் ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
30.11.2025 - திருத்தேர் அன்று சிறப்பு ரயில்
விழுப்புரம் - திருவண்ணாமலை -காட்பாடி - Shuttle Train Services
விழா நாட்களில் வெளிப்புற ஆட்டோக்கள் திருவண்ணாமலை நகருக்கு வருவதை கண்காணிக்க இதுவரை 3,530 ஆட்டோக்களுக்கு QR Code System பொருத்தப்பட்டுள்ளது.
ஆட்டோ கட்டணம் upto 2.5km Rs.40/-, beyond Rs.60/- (per individual) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சாலை வசதிகள் :
7,170 Flexible Delineator (NH- 1670, SH 2500, NHAI 3000) மாற்றம் செய்தல்
நகரின் இணைப்பு சாலைகள், மாநகராட்சி பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகள் மற்றும் கிரிவலப்பாதையில் உள்ள முக்கிய சந்திப்புகளில் Blinkers அமைத்தல்
முக்கிய இடங்கள் மற்றும் அடிப்படை வசதிகளை எளிதில் கண்டறியும் வகையில் Google Point Display தகவல் பலகைகள் வைத்தல்
காவல் துறையால் தெரிவிக்கப்படும் இடங்களில் வேகத்தடைகள் ஏற்படுத்தி தருதல்
கால அட்டவணைப்படி ஆக்கிரமிப்புகள் அகற்றுதல்
கிருஷ்ணா லாட்ஜ் சந்திப்பு முதல் பச்சியம்மன் கோவில் வரை உள்ள சாலையினை நகரில் இருந்து வெளியே செல்லும் மாற்றுப்பாதையாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சாலை போக்குவரத்தினை ஒழுங்கு படுத்த 24.11.2025 முதல் 04.12.2025 வரை
40 Wreckers (Heavy - 16, Light – 24) வாகனங்கள்
மருத்துவ வசதிகள் :
திருக்கோயில் வளாகத்திற்குள் சிறப்பு மருத்துவர்களுடன் 7 மருத்துவ குழுக்கள்
திருக்கோயில் வளாகம் தவிர்த்து இதர இடங்களில் 90 மருத்துவ குழுக்கள்
45 எண்ணிக்கையில் 108 அவசர ஊர்தி வாகனங்கள்
5 Bike Ambulance
5 JUMP Kit
இடுக்கி பிள்ளையார் கோவில் அருகில் 108 அவசர ஊர்தி வாகனத்துடன் மருத்துவ குழு
நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான 2 ஒய்வெடுக்கும் அறைகளில் 8 Beds with Cardiac Facility வசதிகளுடன் மருத்துவ குழுக்கள்
குடிநீர் குளோரினேஷன் உறுதி செய்ய 70 சுகாதார ஆய்வாளர்களுடன் 9 குழுக்கள்
மண்டல பூச்சியல் வல்லுனருடன் கூடிய 3 நோய் பரப்பிகள் கட்டுப்பாட்டு குழுக்கள்
பாதுகாப்பு ஏற்பாடுகள்;
பாதுகாப்பு பணியில் 15,011 காவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
24 தீயணைப்பு வாகனங்கள் 430 தீயணைப்பு வீரர்கள்
26 Vulnerable Points-ல் 104 வனத்துறை வீரர்கள் 104 தன்னார்வலர்கள்
196 காவலர்கள் (Corporation - 96, Rural - 100)
காவலர்கள் தங்குமிடங்களில் தீயணைப்பு வீரர்கள், போக்குவரத்து பணியாளர்கள், ரயில்வே பாதுகாப்பு வீரர்கள் தங்கவும் ஏற்பாடு
1,060 கண்காணிப்பு கேமிராக்கள் (திருக்கோயில் வளாகம் 303, நகரம் மற்றும் கிரிவலப்பாதை 757)
24 இடங்களில் காவல் கண்காணிப்பு கோபுரங்கள் (Watch Tower)
61 இடங்களில் "May I Help You Booths"
454 இடங்களில் பொது அறிவிப்பு அமைப்புகள் (PAS) (திருக்கோயில் வளாகம் 30, நகரம் மற்றும் கிரிவலப்பாதை 424)
26 இடங்களில் பெரிய திரைகள் வாயிலாக நேரடி ஒளிபரப்பு (Big Screen Live) ஏற்பாடு (திருக்கோயில் வளாகம் 15, நகரம் மற்றும் கிரிவலப்பாதை 11)
உபயதாரர்/ கட்டளைதாரர் அனுமதி அட்டைகளை சரிபார்க்க 2 இடங்களில் 5 RFID சரிபார்ப்பு மையங்கள்
இடுக்கி பிள்ளையார் கோவில் அருகே பக்தர்கள் நிற்க தனி வரிசை அமைப்பு மற்றும் பாதுகாப்பு தடுப்பான்கள்
கூட்ட நெரிசல் ஏற்படும் 3 Drop Gates (Booth Narayanana Temple Junction)
திருக்கோயில் வளாகத்திற்குள் ஒருங்கிணைந்த காவல் கட்டுப்பாட்டு அறை
20 இடங்களில் இரும்பால் ஆன கற்பூரம் ஏற்றும் ஸ்டான்ட்
23 இடங்களில் காவலர்களுக்கு Arabian Tents
20 Executive Magistrate நியமனம் செய்யப்பட உள்ளனர்.
குழந்தைகள் கைகளில் Wrist Band கட்ட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
விழா நாட்களில் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தல்
விழா நாட்களில் கிரிவலப்பாதையில் திருநங்கைகள், யாசகம் கேட்பவர்கள், நரிக்குறவர்கள் அத்துமீறலை கண்காணிக்க குழுக்கள்
தங்க வைக்க 2 இடங்கள் தேர்வு (கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு மையம் மற்றும் வேங்கிக்கால் சேவை மையம்)
சாலைகளில் மாடுகளை திரிய அனுமதிக்கூடாது என உரிமையாளர்களுக்கு முன்னதாகவே மாநகராட்சியால் அறிவிப்பு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளது.
தேர்த் திருவிழா - 30.11.2025:
ரூ.71.40 லட்சம் மதிப்பீட்டில் அருள்மிகு அம்மன் திருத்தேர் பழுது பார்க்கும் பணி நிறைவு
ரூ.15.00 கோடி மதிப்பீட்டில் மாடவீதி கான்கீரிட் தளமாக மாற்றும் பணி நிறைவு
தேர் திருநாளான்று மாடவீதியில் 37 ஜெனரேட்டர்கள் மற்றும் அதிக திறன் கொண்ட மின் விளக்குகள் அமைத்தல்
மாடவீதி முழுவதும் ரூ.6.41 கோடி மதிப்பீட்டில் UG Cable அமைக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை : கடந்த ஆண்டு அனுபவம் அடிப்படையில் மாடவீதியில் உள்ள 1,408 மின் இணைப்புகளும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
பக்தர்கள் மற்றும் பொது மக்களுக்கான அடிப்படை வசதிகள் :
திருக்கோயில் வளாகம் :
136 (RO-114, Without RO - 22) குடிநீர் இணைப்புகள்
போதிய நீர் ஆதாரம் உள்ளதை உறுதி செய்யப்பட்டுள்ளது.
12 இடங்களில் 104 Toilet மற்றும் 34 Urinals.
110 தூய்மை பணியாளர்கள் சுழற்சி முறையில் பணி
170 (Permanent -120, Temp - 50) இடங்களில் குப்பை தொட்டிகள்
7 Genset, 5 High Mass Light & 75 Street Lights
25 Wheel Chair, 5 Battery Car
திருக்கோயில் வளாகம் தவிர்த்து இதர இடங்கள் :
111 (RO-22, Without RO - 89) இடங்களில் குடிநீர் வசதிகள்
கிரிவலப்பாதையில் 9 (2 HP) மாற்று மின் மோட்டர்கள்
போதிய நீர் ஆதாரம் உள்ளதை உறுதி செய்யப்பட்டுள்ளது.
129 1059 Toilet மற்றும் 179 Urinals.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை : கடந்த ஆண்டு அனுபவம் அடிப்படையில்
திருக்கோயில் அருகே உள்ள தங்குமிடங்களில் கழிவுகளை உடனுக்குடன் அகற்ற 5 JED Rodding Machine (Large - 4, Small - 1) (Stand by)
2,007 தூய்மை பணியாளர்கள் சுழற்சி முறையில் பணி
307 (Permanent -182, Temp - 125) இடங்களில் குப்பை தொட்டிகள்
61 Genset, 57 High Mass Light, 1,809 Street Lights & 3,724 Temporary Lights
21.11.2025 முதல் 07.12.2025 வரை தடையற்ற மின்சாரம்
தொலை தொடர்பு வசதிகள் :
200 செல்போன் டவர்கள் (BSNL - 35, AIRTEL - 60, JIO 62, VI - 43)
20 அலுவலர்களுக்கு BSNL Green Corridor SIM
Cell on Wheels (CoW) and Increase Data Chaneel பெற தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
140 Walkie Talkies
தீபத்திருவிழாவிற்கென புதிய மொபைல் செயலி (Mobile App)
உணவு பாதுகாப்பு மற்றும் அன்னதானம் :
அன்னதானம் அளிக்க 03.11.2025 முதல் 17.11.2025 வரை விண்ணப்பங்கள் பெறுதல்
விழா நாட்களில் உணவு பாதுகாப்பு குழுக்கள்
மாட்டு சந்தை :
01.12.2025 முதல் 03.12.2025 வரை 03 நாட்கள் மாட்டு சந்தை நடைபெறும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.