திருவண்ணாமலையில் நடக்கும் திமுக இளைஞரணியின் வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்திற்கு முதலமைச்சர் அழைப்பு!
திருவண்ணாமலை: 75 ஆண்டுகளைக் கடந்து தன் அரசியல் பயணத்தை மேற்கொள்ளும் திமுகவுக்கு பக்கபலமாக இருப்பது இளைஞரணி என்று தொண்டர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்று இருக்கிறார். இளைஞரணி நிர்வாகிகளின் சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை திருவண்ணாமலையில் நடக்கும் நிலையில் திமுக இளைஞரணியின் வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். கிராம அளவில் நடைபெறும் அறிவுத் திருவிழா என்றும், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், எல்லாரையும் கொள்கை அளவில் வளர்த்தெடுக்க வேண்டும் என்றும் கூறினார்.
வடக்கு மண்டல திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் 1.30 லட்சம் நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். 50 லட்சத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் என்று வலுவான கட்டமைப்பை கொண்டது திமுக இளைஞரணி. திராவிட மாடல் ஆட்சி தொடரும் என்றும், வெற்றிக்கு அடித்தளமாக இளைஞர் அணி மண்டல நிர்வாகிகள் சந்திப்பு அமைக்கப்படும் என்றும் முதல்வர் கூறினார். திருவண்ணாமலையில் நாளை கலைஞர் திடலில் வடக்கு மண்டல இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது. திருவண்ணாமலை இளைஞர் அணி வடக்கு மண்டல சந்திப்புக்கு வருமாறு தொண்டர்களுக்கு முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார். 1980ல் ஸ்டாலினால் தொடங்கப்பட்ட இளைஞர் அணி திமுகவுக்கு வலிமை சேர்த்து காலத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என தெரிவித்தார்.