தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரூ.2,100 கோடி மதிப்பீட்டில் திருவான்மியூர்-உத்தண்டி வரை 4 வழித்தட உயர்மட்ட சாலை: தமிழக அரசு டெண்டர் கோரியது

சென்னை: கிழக்கு கடற்கரை சாலையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவையில் திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை உயர்மட்ட சாலை அமைக்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு அறிவித்திருந்தார். அதன்படி, 14.2 கி.மீ வரை நான்கு வழித்தட சாலையாக அமைப்பதற்கு ரூ.2,100 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது. இதற்காக ரூ.52 லட்சம் செலவில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டன. தற்போது இத்திட்டத்திற்கான டெண்டரை தமிழக அரசு கோரியுள்ளது. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: கிழக்கு கடற்கரைச் சாலையில் திருவான்மியூரில் இருந்து உத்தண்டி வரை நான்கு வழித்தட உயர்மட்ட சாலை அமைப்பதற்காக டெண்டர் கோரப்பட்டுள்ளது.

Advertisement

இதனை தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் மூலம் செயல்படுத்தப்படவுள்ள உள்ளோம். திருவான்மியூர் - உத்தண்டி சாலை என்பது எப்போது போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக இருந்து வருகின்றன. குறிப்பாக, 45 நிமிடங்கள் வரை உத்தண்டியை கடக்க நேரம் செலவாகின்றன. ஆனால் உயர்மட்ட சாலை அமைக்கும்பட்சத்தில் 20 நிமிடங்களிலேயே கடந்துவிட முடியும். இந்த திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த தேவையில்லை. ஏனெனில் ஈசிஆர் ஏற்கனவே 30 மீட்டர் அகலமாக விரிவாக்கப்பட்டு வருகின்றன. மேலும், இந்த பணிகளை விரைந்து முடிக்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Related News