தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருவள்ளூர் போராளிகள் பெயரில் திருப்பதிக்கு இமெயிலில் வெடிகுண்டு மிரட்டல்: முதல்வர் வீடு, கோயில்களில் அதிரடி சோதனை

திருமலை: திருவள்ளூர் போராளிகள் பெயரில், திருப்பதிக்கு இமெயில் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டலால் போலீசார் முதல்வர் வீடு, ரயில்வே ஸ்டேஷன் உள்ள முக்கிய இடங்களில் சோதனை நடத்தினர். திருப்பதி போலீசார், தேவஸ்தான அதிகாரிகள், ஆந்திர டிஜிபிக்கு நேற்று 2 சந்தேகத்திற்கிடமான இமெயில் வந்தது. அதில் தமிழ்நாட்டின் திருவள்ளூரில் உள்ள ஐ.எஸ்.ஐ மற்றும் முன்னாள் எல்.டி.டி.இ. போராளிகளுடன் சேர்ந்து திருப்பதியில் நான்கு பகுதிகளில் ஆர்.டி.எக்ஸ். வெடிபொருட்கள் வெடிக்கப்பட உள்ளதாக மிரட்டல் விடுக்கப்பட்டது.

Advertisement

அதனடிப்படையில் நேற்று, ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் சொந்த ஊரான திருப்பதி அடுத்த நாராவாரிப்பள்ளியில் உள்ள முதல்வர் வீடு, திருப்பதியில் உள்ள ஆர்.டி.சி. பேருந்து நிலையம், ஸ்ரீனிவாசம், விஷ்ணு நிவாசம் பக்தர்கள் ஓய்வறை, கபில தீர்த்தம் கோயில் மற்றும் கோவிந்தராஜா சுவாமி கோயில், ரயில்வே ஸ்டேஷன் ஆகிய பகுதிகளில் போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் கொண்டு சோதனை மேற்கொண்டர்.

அத்துடன் நீதிபதிகள் குடியிருப்பு வளாகம் மற்றும் நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டன. இந்நிலையில், வரும் 6ம் தேதி முதல்வர் சந்திரபாபு திருப்பதி வர உள்ள நிலையில், வேளாண் கல்லூரி ஹெலிபேடிலும் சோதனைகள் நடத்தப்பட்டன. மேலும், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில், ஸ்ரீகாளஹஸ்தி கோயில்களிலும் வெடிகுண்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் எந்தவித வெடிகுண்டும் கிடைக்கவில்லை. இருப்பினும் தொடர் கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

Related News