தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருவள்ளூர் அருகே பரபரப்பு: சுங்கச்சாவடியில் 271 கிலோ போதை பொருள் பறிமுதல்: 2 பேர் கைது

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் போதைப் பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த மாவட்ட காவல்துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், டிஎஸ்பி தமிழரசி உத்தரவின்படி, திருவள்ளூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் தலைமையில் போலீசார் பட்டரைபெரும்புதுார் சுங்கச்சாவடி பகுதியில் நேற்று மாலை வாகன சோதனை நடத்தினர். அப்போது திருத்தணியில் இருந்து வந்த ஒரு காரை மறித்து போலீசார் சோதனை செய்தபோது அதில் ஹான்ஸ் 10,500 பாக்கெட்டுகள், கூலிப் 224 பாக்கெட்டுகள், விமல் 3120 பாக்கெட்டுகள், வி1 3120 பாக்கெட்டுகள், ஸ்வாகத் 1400 பாக்கெட்டுகள் என மொத்தம் ரூ.3 லட்சம் மதிப்புள்ள 271 கிலோ போதை பொருட்கள் வைத்திருந்தனர்.

Advertisement

இதையடுத்து சென்னை குன்றத்தூரை சேர்ந்த நாராயணன் (40), சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சதீஷ் (35) ஆகியோரை கைது செய்து விசாரித்தபோது சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை பொருட்கள் விற்பனை செய்ததாக தெரிவித்தனர். இதையடுத்து இருவரையும் கைது செய்து 271 கிலோ போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மதுவிற்ற பெண் கைது;

திருவள்ளூர் அடுத்த மப்பேடு சத்தரை பகுதியில் நேற்று மதியம் எஸ்.ஐ. முத்து தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது சத்தரை மேட்டு காலனி பகுதியில் வீட்டில் பதுக்கிவைத்து மது விற்பனை செய்த சாந்தி (50) கைது செய்து அவரது வீட்டில் இருந்து குவார்ட்டர் பாட்டில்கள், பீர்பாட்டில்கள் என மொத்தம் 49 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதன்பின்னர் சாந்தியை திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Advertisement

Related News