தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருவள்ளூர் மாவட்ட மின்வாரியத்துக்கு புதிய மேற்பார்வை பொறியாளர் பொறுப்பேற்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர், திருமழிசை, திருத்தணி ஆகிய 3 இடங்களில் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதில் திருவள்ளூர், திருத்தணி கோட்டங்களில் உள்ள பொது மக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க காஞ்சிபுரம் மாவட்டத்திற்கும், திருமழிசை கோட்டத்தில் தரப்படும் மனுக்கள் செங்கல்பட்டில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்திற்கும் கடிதம் அனுப்பப்படும்.
Advertisement

அதன் பிறகு அவர்கள் தரும் ஒப்புதலுக்குப் பிறகே காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்திற்குச் சென்று அங்குள்ள பண்டக சாலையிலிருந்து மின் கம்பம், டிரான்ஸ்மார்மர், வயர்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் அங்கு இருப்பு இருக்கும்போது மட்டுமே எடுத்து வர வேண்டிய கட்டாயமும் இருந்தது. இதனால் பொதுமக்களின் சிறு, சிறு கோரிக்கைகளுக்கும், உடனடி தீர்வு காண முடியாத நிலை இருந்தது. எனவே மக்களின் அத்தியாவசியத் தேவையான மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் திருவள்ளூரில் செயல்பட வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

அதனைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் விரைவில் செயல்படும் என தமிழ்நாடு அரசு கடந்த செப்டம்பர் மாதம் தெரிவித்தது. அதன்படி திருவள்ளூர் மாவட்டத்திற்கு மேற்பார்வை பொறியாளராக சென்னையில் பணியாற்றிய ஏ.சேகரை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து நேற்று முறைப்படி கையெழுத்திட்டு சேகர் பொறுப்பற்றார். இதுவரை திருவள்ளூர், திருத்தணி செயற்பொறியாளர் அலுவலகம் காஞ்சிபுரம் மேற்பார்வை பொறியாளர் கட்டுப்பாட்டில் இருந்தது. திருமழிசை செயற்பொறியாளர் அலுவலகம் செங்கல்பட்டு மேற்பார்வை பொறியாளர் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால் திருவள்ளூர் மாவட்டத்தில் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் செயல்படும்போது இந்த 3 செயற்பொறியாளர் அலுவலகமும் இதன் கட்டுப்பாட்டில் வரும் என்பதால் மின்சார வாரியத்திற்கு விடுக்கும் கோரிக்கை விரைவில் நிறைவேறும் என்று மேற்பார்வை பொறியாளர் தெரிவித்தார்.

Advertisement

Related News