தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருவள்ளூரில் 377 திட்டப்பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் துணை முதலமைச்சர்

திருவள்ளூர்: தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (24.11.2025) திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு நகராட்சி சுந்தரசோழபுரத்தில் நடைபெற்ற அரசு விழாவில் 333.26 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற 377 திட்டப்பணிகளை திறந்து வைத்து, 137.38 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 211 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 1,12,294 பயனாளிகளுக்கு 1000.34 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Advertisement

இவ்விழாவில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய உரை; இன்றைக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெறுகின்ற இந்த பிரம்மாண்டமான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உங்களையெல்லாம் சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன், பெருமையடைகின்றேன்.

பல்வேறு மாவட்டங்களுக்கு செல்கின்றேன். வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாத வகையில், நம்முடைய திருவள்ளுர் மாவட்டத்தில் இன்றைக்கு மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பயனாளிகளுக்கு சுமார் 1,500 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை நம்முடைய முதலமைச்சர் வழங்க சொல்லியிருக்கிறார்கள்.

அதில், சுமார் 325 கோடி ரூபாய் மதிப்பிலான முடிவுற்ற பணிகளை இன்றைக்கு திறந்து வைத்திருக்கின்றோம், 137 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பணிகளை இன்றைக்கு தொடங்கி வைத்திருக்கின்றோம்.

இங்கே ஒரு முக்கியமான விஷயத்தை உங்களிடம் நான் குறிப்பிட்டு சொல்லவேண்டும். இந்தியாவிலேயே நீர்நிலையில் தன்னிறைவு பெற்ற ஒரு ஊராட்சியாக, இந்த மாவட்டத்தில் உள்ள பாலாபுரம் ஊராட்சி, ஒன்றிய அரசின் விருதை சமீபத்தில் பெற்றுயிருக்கின்றீர்கள்.

அதற்காக உழைத்த மாவட்ட நிர்வாகத்துக்கும், அரசு அதிகாரிகளுக்கும், அலுவலர்களுக்கும், இதனை சாத்தியப்படுத்த ஒத்துழைத்த பொது மக்களுக்கும், குறிப்பாக பாலாபுரம் ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள் அத்தனைபேருக்கும் இந்த நேரத்தில் என்னுடைய வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.

எந்த ஒரு மனிதனுக்கும், உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இடம் என்பது ஒரு அடிப்படை தேவை. இந்த தேவைகளை பூர்த்தி செய்ய பார்த்து பார்த்து திட்டங்களை தீட்டியவர்தான் நம்முடைய முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள்.

குறிப்பாக, கலைஞர் அவர்கள்தான் ஊருக்கு ஊர், தெருவுக்கு தெரு ரேஷன் கடைகளை திறந்து வைத்தார். இன்றைக்கு தமிழ்நாட்டில் உணவுப் பற்றாக்குறை, உணவுப் பஞ்சமே இல்லை என்ற நிலைமையை உருவாக்கியவர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள். அதற்கு அடையாளமாக தான், இன்றைக்கு இந்த நிகழ்ச்சியில் மட்டும் 2,000 பேருக்கு ரேஷன் அட்டை கொடுக்க இருக்கின்றோம்.

முன்னாடி எல்லாம், ரேஷன் கார்டு வாங்குவதற்கு மக்கள் அவதிப்பட வேண்டும், நடையாக நடப்பார்கள். ஆனால், இப்போது நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில், “உங்களுடன் ஸ்டாலின் முகாமை” நம்முடைய முதலமைச்சர் நடத்த உத்தரவிட்டிருந்தார்கள். அந்த முகாமில் அரசே மக்களைத் தேடி வந்து ரேஷன் கார்டு, பட்டா, அரசு சான்றிதழ்கள் என்று பல சேவைகளை செய்து கொடுத்துள்ளது.

அதனுடைய தொடர்ச்சியாகத் தான், இன்றைக்கு இந்த நிகழ்ச்சியில் மட்டும் சுமார் 37 ஆயிரம் பேருக்கு வீட்டு மனைப் பட்டாக்களை கொடுக்க இருக்கின்றோம். இது மிகப் பெரிய ஒரு சாதனை, மகிழ்ச்சியான தருணம்.

சமீபத்தில் கூட, இந்த மாவட்டத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் நம்முடைய முதலமைச்சர் கலந்து கொண்டு சுமார் 65 ஆயிரம் பேருக்கு வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார்.

இப்படி இந்த நான்கரை வருடத்தில் மட்டும் தமிழ்நாடு முழுவதும் சுமார் 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப் பட்டாக்களை நம்முடைய அரசு வழங்கி இருக்கின்றது. இது மிகப் பெரிய ஒரு சாதனை.

பட்டா என்பது இந்த அரசு உங்களுக்கு தருகின்ற ஒரு சலுகை கிடையாது. அது உங்களுடைய உரிமை. பட்டா பெற்ற அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள். இன்றைக்கு உங்களுடைய சொந்த இடத்தில், சொந்த வீட்டில் நீங்கள் மகிழ்ச்சியாக, நிம்மதியாக தூங்கலாம்.

இன்னொரு பிரச்சினை என்னவென்றால், பட்டா இடம் இருக்கும் ஆனால் ஒழுங்கான வீடு இருக்காது. சொந்த வீடு என்பது ஏழை மக்கள், நடுத்தர குடும்பத்து மக்களுக்கு மிகப்பெரிய ஒரு கனவாக ஒரு ஏக்கமாகவே இருக்கும்.

இப்படி வீடற்ற மக்களுக்கு வீடு கொடுக்க வேண்டும் என்பதுதான், கலைஞர் கொண்டுவந்த திட்டம், குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றுகின்ற அந்த திட்டம். அப்படிப்பட்ட நம்முடைய கலைஞர் பெயரிலேயே, நம்முடைய முதலமைச்சர் அவர்கள், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தை தொடங்கி வைத்து, செயல்படுத்தியிருக்கின்றார். இந்தத் திட்டத்தின் மூலம் வீடு கட்டுவதற்கான ஆணைகளை இன்றைக்கு சுமார் 4 ஆயிரம் பயனாளிகளுக்கு கொடுக்க இருக்கின்றோம்.

கலைஞர் கனவு இல்லம் தொடர்பாக, ஒரு சின்ன விஷயத்தை இங்கே நான் உங்களுக்கெல்லாம் நினைவுபடுத்த விரும்புகின்றேன். சமீபத்தில்,, “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” என்ற ஒரு நிகழ்ச்சி, சென்னையில் நடத்தப்பட்டது. அதை பலபேர் தொலைக்காட்சியில் பாத்திருப்பீர்கள். Youtube சேனல்களில் நிச்சயம் வந்திருக்கக்கூடிய தாய்மார்கள் நீங்கள் பார்த்து இருப்பீர்கள்.

அந்த நிகழ்ச்சியில் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த பிரேமா என்ற ஒரு மாணவி பேசினார்கள். மழை பெய்தால் ஒழுகுகிற பழைய வீட்டில் இருப்பதாக, அந்த மாணவி தன்னுடைய கோரிக்கையை முதலமைச்சர் அவர்களிடம் தெரிவித்தார்கள். பிரேமா என்ற மாணவி பேசிய அடுத்த 24 மணி நேரத்தில் அந்த மாணவியின் குடும்பத்திற்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் வீடு ஒதுக்கி நம்முடைய முதலமைச்சர் அந்த மேடையிலேயே உத்தரவிட்டார்கள்.

பேப்பரில் உத்தரவு போட்டதுடன் நிற்கவில்லை. அவர்களுடைய ஊருக்கே சென்று, வீடு கட்டுகின்ற அந்த பணியை ஆய்வு செய்து, அந்த மாணவி குடும்பதாரிடம் வீட்டைக் கொடுத்து வாழ்த்தினார் நம்முடைய முதலமைச்சர் அவர்கள். சென்ற மாதம் வீடு இல்லை என்று சொன்ன ஒரு மாணவி, இந்த மாதம் தன் கண் முன்னால் தன்னுடைய வீடு கட்டப்பட்டுவதை பார்த்து அந்த மாணவி இன்றைக்கு மகிழ்ச்சியில் இருக்கின்றார்கள். அந்த மாணவியுடைய குடும்பமும் மகிழ்ச்சியில் இருக்கின்றார்கள்.

அதே மாதிரி, இன்னொரு சம்பவமும், இந்த திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்தது. ஆவடியைச் சேர்ந்த குழந்தை, அந்த குழந்தையுடைய பெயர் டான்யா. முகச்சிதைவு நோயால் அவதிப்பட்ட அவர்களுக்கு, நம்முடைய முதலமைச்சர் அவர்கள், உரிய சிகிச்சை வழங்க வேண்டும் என்று உடனடியாக உத்தரவு போட்டார்கள். அதற்கான ஏற்பாடுகளை செய்தார்கள்.

சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதும், நம்முடைய முதலமைச்சர் அவர்களே ஆவடி ஸ்ரீவாரி நகரில் இருக்கக்கூடிய டான்யாவின் வீட்டுக்கே சென்று அந்த குழந்தையை பார்த்து வாழ்த்தினார்கள். அப்போது, அந்த குழந்தை சொன்ன வார்த்தை I Love You Stalin Uncle என்று அந்த குழந்தை வாழ்த்தியது. இது தமிழ்நாட்டு மக்கள் அத்தனைபேரையும் நெகிழச் செய்தது.

இப்படி டான்யாக்கள், பிரேமாக்களுடைய முகத்தில் மகிழ்ச்சியை கொண்டு வருகின்ற ஆட்சிதான் திராவிட மாடல் ஆட்சி, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுடைய ஆட்சி என்பதை இங்கே நான் பெருமையோடு கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

இன்றைக்கு இந்த விழாவில் நம்முடைய விளையாட்டுத்துறை சார்பாக திருவள்ளூர் மாவட்டத்தின் பொன்னேரி, பூந்தமல்லி, மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதிகளில் தலா 3 கோடி ரூபாய் மதிப்பிலான Mini Stadium அமைக்க அடிக்கல் நாட்டி இருக்கின்றோம். இந்த மினி ஸ்டேடியங்கள் விரைவில் கட்டிமுடிக்கப்படும். அதை இந்த மாவட்ட விளையாட்டு வீரர்கள் சிறப்பாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நான் வாழ்த்துகின்றேன்.

இது தவிர, இன்றைக்கு இங்கே 50 ஆயிரம் மகளிர் சுய உதவிக் குழு சகோதரிகளுக்கு அடையாள அட்டையும் கொடுக்க இருக்கின்றோம். நான் ஒவ்வொரு மாவட்டத்திலும், மகளிர் குழு சகோதரிகளிடம் பேசும் போது, என்னிடம் சொல்லுவார்கள். “அண்ணா, Software-ல் வேலை செய்தால் மட்டும் தான் அடையாள அட்டை கொடுப்பீர்களா, சாதிக்க வேண்டும் என்று வேலை செய்கின்ற எங்களுக்கும் அடையாள அட்டை கொடுக்க மாட்டீர்களா என்று அந்த குழுக்களைச் சேர்ந்த சகோதரிகள் உரிமையோடு கேட்டார்கள்.

அந்த கோரிக்கையை முதலமைச்சர் அவர்களிடம் சொன்னவுடனே, முதலமைச்சர் போட்ட உத்தரவு, இன்றைக்கு இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இந்த திட்டம் கிடையாது. மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த அத்தனை சகோதரிகளுக்கும், புகைப்படத்துடன் சேர்ந்து அடையாள அட்டை கொடுக்கப்பட்டிருக்கிறது.

நம்முடைய முதலமைச்சர் கூறியது, அடையாள அட்டை கொடுத்தால் மட்டும் போதாது, அந்த அடையாள அட்டை மூலமாக அவர்களுக்கு பல்வேறு பயன்களும் கிடைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்கள்.

இதன் மூலமாக, குழு சகோதரிகள், உங்களுடைய தயாரிப்பு பொருட்களை வேறு ஊர்களுக்கு சென்று விற்க வேண்டும் என்றால், 25 கிலோ வரைக்கும் அரசு பேருந்துகளில் 100 கிலோமீட்டர் தூரத்திற்கு

எந்தவித கட்டணமும் இல்லாமல் நீங்கள் எடுத்து செல்லலாம். இதன் மூலம் உங்களுக்கு வருகின்ற வருமானமும், இலாபமும் இன்னும் அதிகமாக இருக்கும்.

நம்முடைய ஆட்சி அமைந்த பிறகு குழு சகோதரிகளுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான அளவில் வங்கிக் கடன் இணைப்புகளும் வழங்கப்பட்டு இருக்கிறது. குழுவின் தயாரிப்பு பொருட்களுக்கு நல்ல மார்க்கெட்டிங் செய்கின்றோம், அதை பொது மக்களும் விரும்பி வாங்கி செல்கின்றார்கள்.

இரண்டு நாட்களுக்கு முன்பு, மதுரையில் குழு சகோதரிகளுக்கான SARAS MELA விற்பனை கண்காட்சியையும், உணவுத்திருவிழாவையும் நான் திறந்து வைத்தேன். இப்படி குழுவில் இருக்கக்கூடிய சகோதரிகளுக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டினுடைய ஒட்டு மொத்த மகளிருக்கும் ஏராளமான திட்டங்களை நம்முடைய அரசு செய்து கொண்டிருக்கிறது.

உதாரணத்திற்கு விடியல் பயணத் திட்டம், நான்கரை வருடங்களுக்கு முன்பு நம்முடைய ஆட்சி பொறுப்பு வந்தவுடன், நம்முடைய முதலமைச்சர் போட்ட முதல் கையெழுத்து, இங்கு வந்திருக்கக்கூடிய மகளிர் உங்களுக்கான கையெழுத்து, அதுதான் விடியல் பயணத் திட்டம். இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மகளிரும் மாதம் 900 ரூபாயிலிருந்து 1,000 ரூபாய் வரை சேமிக்கின்றார்கள் என்று புள்ளிவிபர கணக்குகள் சொல்கின்றது.

அதுமட்டுமல்ல, குழந்தைகள் பயன்பெறுகின்ற முதலமைச்சர் காலை உணவுத் திட்டம். குழந்தைகள் படிக்க வேண்டும், உயர்கல்வி படிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு கொண்டு வந்த திட்டம், புதுமைப் பெண் திட்டம். இது எல்லாவற்றிக்கும் முத்தாய்ப்பாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம். ஒவ்வொரு மாதமும் 1 கோடியே 15 இலட்சம் மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் நம்முடைய முதலமைச்சர் உரிமைத் தொகையாக கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

சில இடங்களில் சில குறைகள் இருந்தது. எங்களது பேர் விட்டுப்போனது என்று, சமீபத்தில் நடந்த முகாம்களில் அதிகமாக பெறப்பட்ட மனுக்கள் இந்த உரிமைத் தொகைக்காகதான். நான் சட்ட சபையில் முதலமைச்சர் அறிவுறுத்தலின் பேரில், அறிவித்தேன். வருகின்ற டிசம்பர் 15 ஆம் தேதி முதல் விடுபட்டுள்ள சில மகளிருக்கும் நிச்சயம் அந்த மகளிர் உரிமைத் தொகை திட்டம் விரிவுபடுத்தப்படும் என்ற வாக்குறுதியை கொடுத்திருக்கின்றேன். வருகின்ற டிசம்பர் 15 ஆம் தேதி அனைத்து மகளிருக்கும் மாதம் 1,000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை திட்டம் நிச்சயம் வந்து சேரும்.

இப்படி பெண்கள், திருநர்கள், மாற்றுத்திறனாளிகள், ஏழை எளிய ஒடுக்கப்பட்ட மக்கள் என்று அனைத்து தரப்பு மக்களின் முன்னேற்றத்திற்காகவும் நம்முடைய திராவிட மாடல் அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த அரசு எப்படி உங்களுக்கெல்லாம் ஆதரவாக இருக்கின்றதோ, உங்களுக்காக செயல்படுகின்றதோ, அதே மாதிரி இந்த அரசுக்கு நீங்கள் ஆதரவாக இருக்கவேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கின்றேன்.

உங்களுக்காக இன்னும் அதிகமாக உழைப்பதற்காக நம்முடைய முதலமைச்சர் அவர்களும், நம்முடைய அரசும் தயாராக இருக்கின்றது. ஆகவே, திராவிட மாடல் அரசு தொடர நீங்கள் அத்தனைபேரும் நம்முடைய அரசிற்கு துணை நிற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு, நலத்திட்ட உதவிகளைப் பெற்ற அத்தனைப் பேருக்கும் மீண்டும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

இந்த நிகழ்ச்சியை மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்த திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்திற்கும் மீண்டும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து, வாய்ப்பிற்கு நன்றி கூறி விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம் என்று தமிழ்நாடு துணை முதலமைச்சர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர், நாடளுமன்ற உறுப்பினர் ச.சசிகாந்த் செந்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆ.கிருஷ்ணசாமி, எஸ்.சுதர்சனம், வி.ஜி.இராஜேந்திரன், எஸ்.சந்திரன், டி.ஜே.கோவிந்தராஜன், க.கணபதி, துரை சந்திரசேகர், மாவட்ட ஆட்சித் தலைவர் மு.பிரதாப், ஆவடி மாநகராட்சி மேயர் கு.உதயகுமார், திருவேற்காடு நகர்மன்ற தலைவர் என்.இ.கே.மூர்த்தி, ஆவடி மாநகராட்சி ஆணையர் திருமதி சரண்யா,மாவட்ட வருவாய் அலுவலர் சு.சுரேஷ், சார் ஆட்சியர் ரவிக்குமார்,திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) ஜெயக்குமார், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News