தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருவள்ளூர் மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குச்சாவடி மறுசீரமைப்பு: கலெக்டர் பிரதாப் தகவல்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் 1,200 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடி மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளது என்றும், ஏற்கனவே 3,699 வாக்குச்சாவடிகள் இருந்த நிலையில், 304 வாக்குச்சாவடிகள் அதிகரித்து 4,003 வாக்குச்சாவடியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘இந்திய தேர்தல் ஆணையம், தனது உத்திரவில் ஒரு வாக்குச் சாவடியில் 1,200 வாக்காளர்களுக்கு மேல் இருந்தால், அதனை பிரித்து வாக்குச்சாவடி மறுசீரமைப்பு செய்ய தெரிவித்துள்ளது’. அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் உள்ள 3,699 வாக்குச்சாவடிகளில் 697 வாக்குச்சாவடிகள் 1,200 வாக்களார்களுக்கு மேல் கொண்டதாக உள்ளது. மேலும், வாக்குச்சாவடி மறுசீரமைப்பு கீழ்க்கண்ட பிரிவுகள் கொண்டது. வாக்குச்சவாடிகளை இரண்டாக பிரிப்பது, வாக்குச்சாவடியின் பகுதிகளை மறுசீரமைப்பது, வாக்குச்சாவடியின் பெயர் மாற்றப்பட்டிருப்பின் அதனை மாற்றுவது, வாக்குச்சாவடிகளை புதிய இடத்தில் மாற்றுவது, வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு தொடர்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் புலத் தணிக்கை மேற்கொண்டு கீழ்க்கண்டவாறு முன்மொழிகள் அளித்துள்ளனர்.

அதன்படி, கும்மிடிப்பூண்டி ஏற்கனவே இருந்த வாக்குச்சாவடிகள் 330, தற்போது 1,200 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகள் - 24, புதியதாக தோற்றுவிக்கப்பட்ட வாக்குச்சாவடிகள் 14, வாக்குச்சாவடி பிரிவுகளில் மறு சீரமைப்பு 12, வாக்குச்சாவடி ஒன்றிணைத்தல் 0 வாக்குச்சாவடி கட்டிட இருப்பிட மாற்றம் 18 வாக்குச்சாவடிகளின் பெயர் மாற்றம் 0 நிகர அதிகரிப்பு 14, புதிய பாகம் தோற்றுவிக்கப்பட்ட பின் உள்ள மொத்த பாகங்கள் - 344. பொன்னேரி (தனி) ஏற்கனவே இருந்த வாக்குச்சாவடிகள் 313, தற்போது 1,200 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகள் 25, புதியதாக தோற்றுவிக்கப்பட்ட வாக்குச்சாவடிகள் 14, வாக்குச்சாவடி பிரிவுகளில் மறு சீரமைப்பு 26, வாக்குச்சாவடி ஒன்றிணைத்தல் 0, வாக்குச்சாவடி கட்டிட இருப்பிட மாற்றம் 3, வாக்குச்சாவடிகளின் பெயர் மாற்றம் 0, நிகர அதிகரிப்பு 14, புதிய பாகம் தோற்றுவிக்கப்பட்ட பின் உள்ள மொத்த பாகங்கள் - 327.

திருத்தணி ஏற்கனவே இருந்த வாக்குச்சாவடிகள் 330, தற்போது 1,200 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகள் 14, புதியதாக தோற்றுவிக்கப்பட்ட வாக்குச்சாவடிகள் 7, வாக்குச்சாவடி பிரிவுகளில் மறுசீரமைப்பு 6, வாக்குச்சாவடி ஒன்றிணைத்தல் 0, வாக்குச்சாவடி கட்டிட இருப்பிட மாற்றம் 9, வாக்குச்சாவடிகளின் பெயர் மாற்றம் 3, நிகர அதிகரிப்பு 7, புதிய பாகம் தோற்றுவிக்கப்பட்ட பின் உள்ள மொத்த பாகங்கள் - 337. திருவள்ளூர் ஏற்கனவே இருந்த வாக்குச்சாவடிகள் 296, தற்போது 1,200 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகள் 40, புதியதாக தோற்றுவிக்கப்பட்ட வாக்குச்சாவடிகள் 37, வாக்குச்சாவடி பிரிவுகளில் மறுசீரமைப்பு 5, வாக்குச்சாவடி ஒன்றிணைத்தல் 0, வாக்குச்சாவடி கட்டிட இருப்பிட மாற்றம் 5, வாக்குச்சாவடிகளின் பெயர் மாற்றம் 0, நிகர அதிகரிப்பு 37, புதிய பாகம் தோற்றுவிக்கப்பட்ட பின் உள்ள மொத்த பாகங்கள் - 333.

பூந்தமல்லி (தனி) ஏற்கனவே இருந்த வாக்குச்சாவடிகள் 397, தற்போது 1,200 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகள் 81, புதியதாக தோற்றுவிக்கப்பட்ட வாக்குச்சாவடிகள் 55, வாக்குச்சாவடி பிரிவுகளில் மறுசீரமைப்பு 38, வாக்குச்சாவடி ஒன்றிணைத்தல் 0, வாக்குச்சாவடி கட்டிட இருப்பிட மாற்றம் 20, வாக்குச்சாவடிகளின் பெயர் மாற்றம் 6, நிகர அதிகரிப்பு 55, புதிய பாகம் தோற்றுவிக்கப்பட்ட பின் உள்ள மொத்த பாகங்கள் - 452. ஆவடி ஏற்கனவே இருந்த வாக்குச்சாவடிகள் 457, தற்போது 1,200 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகள் - 127, புதியதாக தோற்றுவிக்கப்பட்ட வாக்குச்சாவடிகள் 42, வாக்குச்சாவடி பிரிவுகளில் மறுசீரமைப்பு 204, வாக்குச்சாவடி ஒன்றிணைத்தல் 0, வாக்குச்சாவடி கட்டிட இருப்பிட மாற்றம் 33, வாக்குச்சாவடிகளின் பெயர் மாற்றம் 0, நிகர அதிகரிப்பு 42, புதிய பாகம் தோற்றுவிக்கப்பட்ட பின் உள்ள மொத்த பாகங்கள் - 499.

மதுரவாயல் ஏற்கனவே இருந்த வாக்குச்சாவடிகள் 440, தற்போது 1,200 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகள் 100, புதியதாக தோற்றுவிக்கப்பட்ட வாக்குச்சாவடிகள் 42, வாக்குச்சாவடி பிரிவுகளில் மறுசீரமைப்பு 57, வாக்குச்சாவடி ஒன்றிணைத்தல் 0, வாக்குச்சாவடி கட்டிட இருப்பிட மாற்றம் 2, வாக்குச்சாவடிகளின் பெயர் மாற்றம் 0, நிகர அதிகரிப்பு 42, புதிய பாகம் தோற்றுவிக்கப்பட்ட பின் உள்ள மொத்த பாகங்கள் - 482, அம்பத்தூர் ஏற்கனவே இருந்த வாக்குச்சாவடிகள் 350, தற்போது 1,200 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகள் 114, புதியதாக தோற்றுவிக்கப்பட்ட வாக்குச்சாவடிகள் 28, வாக்குச்சாவடி பிரிவுகளில் மறுசீரமைப்பு 118, வாக்குச்சாவடி ஒன்றிணைத்தல் 14 வாக்குச்சாவடி கட்டிட இருப்பிட மாற்றம் 27, வாக்குச்சாவடிகளின் பெயர் மாற்றம் 23, நிகர அதிகரிப்பு 14, புதிய பாகம் தோற்றுவிக்கப்பட்ட பின் உள்ள மொத்த பாகங்கள் - 364.

மாதவரம் ஏற்கனவே இருந்த வாக்குச்சாவடிகள் 475, தற்போது 1,200 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகள் 122, புதியதாக தோற்றுவிக்கப்பட்ட வாக்குச்சாவடிகள் 46, வாக்குச்சாவடி பிரிவுகளில் மறு சீரமைப்பு 77, வாக்குச்சாவடி ஒன்றிணைத்தல் 0, வாக்குச்சாவடி கட்டிட இருப்பிட மாற்றம் 19, வாக்குச்சாவடிகளின் பெயர் மாற்றம் 0, நிகர அதிகரிப்பு 46, புதிய பாகம் தோற்றுவிக்கப்பட்ட பின் உள்ள மொத்த பாகங்கள் - 521.

திருவொற்றியூர் ஏற்கனவே இருந்த வாக்குச்சாவடிகள் 311, தற்போது 1,200 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகள் 50, புதியதாக தோற்றுவிக்கப்பட்ட வாக்குச்சாவடிகள் 33, வாக்குச்சாவடி பிரிவுகளில் மறுசீரமைப்பு 15, வாக்குச்சாவடி ஒன்றிணைத்தல் 0, வாக்குச்சாவடி கட்டிட இருப்பிட மாற்றம் 5, வாக்குச்சாவடிகளின் பெயர் மாற்றம் 0, நிகர அதிகரிப்பு 33, புதிய பாகம் தோற்றுவிக்கப்பட்ட பின் உள்ள மொத்த பாகங்கள் - 344.

ஏற்கனவே, இருந்த மொத்த வாக்குச்சாவடிகள் 3,699, தற்போது 1,200 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகள் 697, புதியதாக தோற்றுவிக்கப்பட்ட வாக்குச்சாவடிகள் 318, வாக்குச்சாவடி பிரிவுகளில் மறுசீரமைப்பு 558, வாக்குச்சாவடி ஒன்றிணைத்தல் 14, வாக்குச்சாவடி கட்டிட இருப்பிட மாற்றம் 141, வாக்குச்சாவடிகளின் பெயர் மாற்றம் 32, நிகர அதிகரிப்பு 304, புதிய பாகம் தோற்றுவிக்கப்பட்ட பின் உள்ள மொத்த பாகங்கள் 4003 ஆக உயர்ந்துள்ளது. மேலும், வாக்காளர் பதிவு அலுவலர்களை சட்டமன்றம் வாரியாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர்களுடன் ஆலோசனையும் நடத்தியுள்ளனர்.

அதனைத்தொடர்ந்து, மாவட்ட தேர்தல் அலுவலர் வரைவு வாக்குச்சாவடி பட்டியலை வெளியிட்டு, மாவட்ட அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். மேலும், இதுதொடர்பாக பொதுமக்களும் தங்களது கருத்துக்களை 7 தினங்களுக்குள், மாவட்ட தேர்தல் அலுவலர் அல்லது கீழ்க்கண்ட அலுவலகங்களில் உள்ள வாக்காளர் பதிவு அலுவலர் அல்லது உதவி வாக்காளர் பதிவு அலுவலரிடம் எழுத்து பூர்வமாக அளிக்கலாம்.

அதன்படி, கும்மிடிப்பூண்டி தொகுதிக்கான வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகம் வட்டாட்சியர் அலுவலகம், கும்மிடிப்பூண்டி, உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகம் வட்டாட்சியர் அலுவலகம், கும்மிடிப்பூண்டி அலுவலகத்திலும், பொன்னேரி தொகுதிக்கான வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகம் சார் ஆட்சியர் அலுவலகம், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகம் பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகம், பொன்னேரி அலுவலகத்திலும், திருத்தணி தொகுதிக்கான வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகம், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், திருத்தணி வட்டாட்சியர்அலுவலகம், திருத்தணி அலுவலகத்திலும், திருவள்ளூர் தொகுதிக்கான வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகம், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகம், திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகம், திருவள்ளூர் அலுவலகத்திலும், பூவிருந்தவல்லி தொகுதிக்கான வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகம், பூவிருந்தவல்லி வட்டாட்சியர் அலுவலகம், பூவிருந்தவல்லி அலுவலகத்தில் தெரிவிக்கலாம்.

அதேபோல், ஆவடி தொகுதிக்கான வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகம், மாநகராட்சிஅலுவலகம், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகம், ஆவடி வட்டாட்சியர் அலுவலகம், ஆவடி அலுவலகத்திலும், மதுரவாயல் தொகுதிக்கான வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகம் மத்தியசென்னை.

வட்டாட்சியர் அலுவலகம், மதுரவாயல் அலுவலகத்திலும், அம்பத்தூர் தொகுதிக்கான வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகம், மண்டல அலுவலர், உதவி ஆணையர் அலுவலகம், மண்டலம்- 7, உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் அம்பத்தூர் அலுவலகத்திலும், மாதவரம் தொகுதிக்கான வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், வடசென்னை கோட்டம், சென்னை, உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், மாதவரம் அலுவலகத்திலும், திருவொற்றியூர் தொகுதிக்கான வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகம், மண்டல அலுவலர் , உதவி ஆணையர் அலுவலகம், மண்டலம் -1, உதவி உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகம், திருவொற்றியூர், சென்னை - 600019, வட்டாட்சியர் அலுவலகம், திருவொற்றியூர் அலுவலகத்திலும் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Related News