தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருவள்ளூர் மாவட்டத்தில் நவ.1ம் தேதி அனைத்து பள்ளிகளும் முழு நாள் செயல்படும்: மாவட்ட கல்வி அலுவலர்

 

Advertisement

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் நவ.1ம் தேதி அனைத்து பள்ளிகளும் முழு நாள் செயல்படும் என்று மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். கனமழை காரணமாக அக்.22ம் தேதி வழங்கப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் பள்ளி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை, புயல் போன்ற இயற்கைச் சீற்றங்களால் விடுமுறை அறிவிக்கப்பட்டது

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வங்க கடலில் உருவாக்கி டெல்டா மாவட்டங்கள் மற்றும் வடக்கு கடலோர மாவட்டங்களுக்கான மழை அதிகமாக பெய்தது. இதனைத் தொடர்ந்து மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரி விடுமுறை அறிவிக்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டத்தில் இரண்டு இடங்களில் 100 மில்லி மீட்டருக்கு அதிகமாக ஊத்துக்கோட்டை மற்றும் ஆவடி இரண்டு பகுதிகளில் மழை பெய்தது. மற்ற இடங்களில் சராசரியாக 62 -70மிமீ மழை இருந்தது. மொத்தமாக மாவட்டத்தின் சராசரியாக மழை 7.5 சென்டிமீட்டராக பதிவாகியுள்ளது.

அதிகபட்சமாக ஊத்துக்கோட்டையில் 167 செமீ மழை பதிவாகியது. ஊத்துக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளான தண்டலம், பாலவாக்கம்,பெரியபாளையம, தாமரைப்பாக்கம்,வெங்கல் ஆகிய பகுதிகளில் காலை முதலே விட்டுவிட்டு கனமழையானது பெய்து கொண்டு வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

முன்னதாக, தமிழ்நாடு முதலமைச்சர் டெல்டா மாவட்ட ஆட்சியர் மற்றும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்களோடு காணொளி மூலமாக ஆய்வு நடத்தினார். ஒவ்வொரு துறையையும் எவ்வாறு ஒருங்கிணைத்து நடத்த வேண்டும் என்று அனைத்து அறிவுரைகளையும் ஆட்சியர்களுக்கு கூறினார்.

அதேபோன்று, திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு ராமகிருஷ்ணா நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் அக்டோபர் 22ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தார். அந்த விடுமுறையை இது செய்யும் விதமாக நவம்பர் 1ம் தேதி அனைத்து பள்ளிகளும் முழுநாள் செயல்படும் என்று மாவட்ட கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.

 

Advertisement

Related News