திருவாடானை அருகே அய்யனார் கோயில் கலசம் திருட்டு
திருவாடானை: திருவாடானை அருகே, அய்யனார் கோயிலில் கோபுரக் கலசம் திருடப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே ஆதியாகுடி கிராமத்தில் ஊருக்கு வெளியே பிரசித்தி பெற்ற அய்யனார் கோயில் உள்ளது. இங்கு நேற்று காலை வழக்கம் போல் பூஜைகள் செய்வதற்காக பூசாரி வந்துள்ளார். அப்போது, கோபுரத்தின் உச்சியில் இருந்த கலசம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இது குறித்து கோயில் நிர்வாகத்தினருக்கும், கிராமத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ெ
தாடர்ந்து திருவாடானை காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் திருவாடானை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். திருடுபோன கலசத்தின் மதிப்பு சுமார் ரூ.50 ஆயிரம் என கூறப்படுகிறது. நள்ளிரவில் கோயில் கோபுரத்தில் ஏறி மர்மநபர்கள் கலசத்தைத் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, ‘கலசத்தைத் திருடிச் சென்ற மர்மநபர்கள் யார் என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.