திருத்துவபுரம் காட்டுவிளையில் ரூ.16 லட்சத்தில் கான்கிரீட் சாலை
மார்த்தாண்டம் : திருத்துவபுரம் காட்டுவிளையில் கான்கிரீட் சாலை அமைக்க ரூ.16 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.குழித்துறை நகராட்சிக்கு உட்பட்ட முதலாவது வார்டில் திருத்துவபுரம் காட்டுவிளை பார்க் அருகே இருந்து மெயின் ரோடு வரை கான்கிரீட் சாலை அமைக்க ரூ.16 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
Advertisement
இதற்கான பணியை குழித்துறை நகராட்சி சேர்மன் பொன் ஆசை தம்பி துவக்கி வைத்தார்.ஆணையாளர் ராஜேஸ்வரன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் ஆர்.ஐ.செந்தில் குமார், கவுன்சிலர்கள் விஜயலட்சுமி, மினி குமாரி, ரோஸ்லெட், ஜெயலஷ்மி, ஜூலியட் மெர்லின் ரூத், விஜூ, அருள், சர்தார்ஷா, ஜெலிலா ராணி, லில்லி புஷ்பம், முன்னாள் கவுன்சிலர் ராஜகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான பணி ஒரு மாதத்தில் நிறைவடையும் என தெரிவித்தனர்.
Advertisement