திருத்துறைப்பூண்டியில் தாளடி நடவு பணிகள் மும்முரம்
திருத்துறைப்பூண்டி : டெல்டா பாசனத்திற்க்கு இந்த ஆண்டு சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12-ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்தார்.
இதனையடுத்து கடைமடை பகுதிக்கு போதிய அளவு தண்ணீர் சென்ற அடைந்ததன் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 1 லட்சம் ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பளவில் விவசாயிகள் குறுவை சாகுபடி செய்திருந்தனர்.
குறிப்பாக திருத்துறைப்பூண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு திருத்துறைப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளில் குறுவை சாகுபடி அதிகமாக செய்து இருந்தனர். தற்போது குறுவை அறுவடை பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
பல்வேறு பகுதிகளிலும் இன்னும் அறுவடை பணிகள் முடியவில்லை. குறுவை அறுவடை பணிகள் முடிந்த வயல்களில் தற்போது விவசாயிகள் தாளடி நடவு பணி செய்வதற்காக விவசாயிகள் டிராக்டர் கொண்டு சேற்று உழவு அடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.