திருத்தணி மலைக்கோயில் சாலை சீரமைப்பு 2 நாட்கள் திருக்கோயில் பேருந்து மட்டும் இயங்கும்: கோயில் நிர்வாகம் அறிவிப்பு
சென்னை: திருத்தணி மலைக்கோயிலுக்கு செல்லும் தார்சாலையை சீரமைக்கும் பணி 2நாட்கள் நடப்பதால் திருக்கோயில் பேருந்து மட்டும் இயங்கும் என்று திருக்கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, திருக்கோயில் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை: திருத்தணி சுப்பிரமணியசுவாமி கோயில் மலைக்கோயிலுக்கு செல்லும் மலைப்பாதை தார் சாலையை சீரமைக்கும் பணி நாளை மற்றும் 2ம் தேதி ஆகிய 2 நாட்கள் நடைபெற உள்ளது. இதனால், அன்று திருக்கோயில் பேருந்து மட்டும் இயங்கும். 2ம் தேதி திருக்கோயில் பேருந்து மற்றும் இருசக்கர வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படும்.
Advertisement
Advertisement