அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வலியுறுத்தி திருப்போரூரில் 9ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
Advertisement
இங்கு நான்குவழிச் சாலை அமைக்க வேண்டுமென பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர். திருப்போரூர் சார்பதிவாளர் அலுவலகம் 150 ஆண்டுகால பழமையான கட்டிடத்தில் செயல்படுகிறது. அங்கு போதுமான இடவசதி இல்லை. இப்படியான, மக்களின் அடிப்படை தேவைகளையும், அவர்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்றி தர வேண்டி அதிமுக சார்பில் வரும் 9ம் தேதி காலை 10 மணிக்கு திருப்போரூர் பேரூராட்சி மன்ற அலுவலகம் அருகில் முன்னாள் அமைச்சர் வளர்மதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள், பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவரும் பெருந்திரளாக கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Advertisement