தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருப்போரூர் பேரூராட்சியில் சாலையோரம் குவியும் குப்பை அதிகரிக்கும் நோய் பாதிப்பு

திருப்போரூர்: திருப்போரூர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதிகளில் காலை நேரங்களில் வீடு வீடாக சென்று குப்பைகள் பெறப்படுவது ஒருபுறமிருக்க, மற்றொரு பக்கம் இரவு நேரங்களில் திருப்போரூர் பேருந்து நிலையம், ஓஎம்ஆர் சாலை, நான்கு மாட வீதிகளில் குப்பைகளை அகற்றும் பணியும் தனியே நடந்து வருகிறது. எனினும், இங்கு வீட்டு குப்பைகளை தூய்மை பணியாளர்களிடம் முறையாக கொடுக்காமல், ஆங்காங்கே சாலையோரங்களில் பலரும் குப்பைகளை வீசிவிட்டு செல்கின்றனர். இதுமட்டுமின்றி, ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் குப்பைகளை மூட்டையாக கட்டி, வாகனங்களில் கொண்டு வந்து சாலையோரங்களில் வீசிவிட்டு செல்கின்றனர். இதனால் திருப்போரூர் பேரூராட்சியின் பல்வேறு பகுதி சாலையோரங்களில் ஏராளமான குப்பைக் கழிவுகள் தேங்கி கிடக்கின்றன.

Advertisement

இக்குப்பைக் கழிவுகளில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் கொசு உற்பத்தி மூலம் அதிகளவு நோய்தொற்று பரவல் அதிகரிக்கும் நிலை உள்ளது. குறிப்பாக தெற்கு மாட வீதி, அரசு மருத்துவமனை, இள்ளலூர் சாலை, வீராணம் சாலை போன்ற இடங்களில் தேங்கி கிடக்கும் குப்பைக் கழிவுகளை நாய், பன்றிகள் கிளறுவதால் நோய்தொற்று பரவல்கள் ஏற்பட்டுள்ளன. இவற்றை தவிர்க்க, இப்பகுதிகளில் தேங்கியுள்ள குப்பைக் கழிவுகளை முறையாக அகற்றி சீரமைத்து, தூய்மை மற்றும் சுகாதாரப் பணிகளை மேற்கொள்வதற்கு பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Advertisement