தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருப்போரூர் அருகே அரிவாளுடன் வலம் வந்து வியாபாரிகளை மிரட்டி மாமூல் கேட்ட ரவுடி கைது

திருப்போரூர்: திருப்போரூரில் இருந்து கூடுவாஞ்சேரி செல்லும் சாலையில் நெல்லிக்குப்பம் ஊராட்சி உள்ளது. இங்கு நெல்லிக்குப்பம், அகரம், அம்மாப்பேட்டை ஆகிய 3 கிராமங்கள் உள்ளன. நெல்லிக்குப்பம் ஊராட்சியில் தனியார் மருத்துவக்கல்லூரி, மருத்துவமனை, தனியார் அடுக்குமாடி குடியிருப்புகள், தனியார் கலைக்கல்லூரி உள்ளன. ஓஎம்ஆர் சாலை மற்றும் ஜிஎஸ்டி சாலை ஆகியவற்றுக்கு இடையே இந்த ஊராட்சி உள்ளதால் வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது.

Advertisement

சிறு ஓட்டல்கள், டீக்கடைகள், வர்த்தக நிறுவனங்கள் தொடங்கப்பட்டு பல்வேறு தரப்பு மக்களின் வாழ்வாதாரமாக மாற்றம் பெற்று வருகிறது. இந்நிலையில், இப்பகுதியில் ரவுடிகளின் அட்டகாசம் அதிகரித்து உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். குறிப்பாக, சில ரவுடிகள் ஒன்று ேசர்ந்து கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் வீதிகளில் சுற்றித் திரிவதாகவும், டீக்கடைகள், ஓட்டல்களில் பணம் கொடுக்காமல் பொருள்களை எடுத்து செல்வதாகவும், வாரந்தோறும் மாமூல் கேட்டு மிரட்டுவதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் நடத்தும் டீக்கடைகளை குறிவைத்து ரவுடிகள் இச்செயலில் ஈடுபடுவதாகவும், சாப்பிட்டுவிட்டு பணம் கேட்டால் தர மறுத்து கண்ணாடி பாட்டில்களை தூக்கிப்போட்டு உடைத்து அரிவாளை காட்டி மிரட்டி செல்வதாகவும் வியாபாரிகள் சங்கத்தினர் கூறினர். அண்மையில் கொட்டமேடு பகுதியில் அரிவாளால் ஓடஓட வெட்டிய நெல்லிக்குப்பம் பகுதியை சேர்ந்த சேது (எ)வாலிபரை திருப்போரூர் போலீசார் பிடித்து வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். அந்த நபர் தற்போது வெளியே வந்து நானும் ரவுடிதான் என்ற போர்வையில் வீடியோவை காட்டி நெல்லிக்குப்பம் வியாபாரிகளை மிரட்டி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும் சேதுவும் அவனது நண்பர்களும் வியாபாரிகளை மிரட்டி டீக்கடை பொருட்களை அடித்து உடைக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. இதையடுத்து திருப்போரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம், காயார் போலீஸ் எஸ்ஐ ரமேஷ் ஆகியோர் நெல்லிக்குப்பத்தில் அரிவாளுடன் வலம் வந்து மாமூல் கேட்ட சேது என்ற பில்லா (21) என்பவரை நேற்று கைது செய்து திருப்போரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement

Related News