திருப்பரங்குன்றத்தில் உண்ணாவிரதம்
திருப்பரங்குன்றம்: மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கிராம மக்கள் சார்பில் தீபம் ஏற்றக் கோரி திருப்பரங்குன்றம் கிராம மக்கள் சார்பாக கடந்த 6ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி கோரி, திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் மனு அளிக்கப்பட்டது. ஆனால் பதற்றமான சூழலை தொடர்ந்து போலீசார் அனுமதியளிக்கவில்லை.
Advertisement
இதனைத் தொடர்ந்து ஐகோர்ட் மதுரை கிளையில் நடைபெற்ற வழக்கில் 18 வழிகாட்டுதல்களுடன் நேற்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதம் இருக்க அனுமதி வழங்க உத்தரவிடப்பட்டது. இதன்படி, நேற்று திருப்பரங்குன்றம் மயில் மண்டபம் அருகே பெண்கள் உள்பட 50 பேர் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
Advertisement