திருப்பரங்குன்றம் விவகாரம் நீதி வென்றுள்ளது: எல்.முருகன் எக்ஸ்தள பதிவு
சென்னை: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் எக்ஸ்தள பதிவு: திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிடவோம் என்று கூறி அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு நீதிமன்றம் சம்மட்டி அடி கொடுத்துள்ளது. உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் திருப்பரங்குன்றம் வழக்கில் 2 நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்புக்குப் பிறகு, 3வது நீதிபதி நேற்று தீர்ப்பளித்துள்ளார். அந்த மலையை திருப்பரங்குன்றம் மலை என்றே அழைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். மதுரை முருகர் மாநாட்டில் தமிழகமே ஒன்று திரண்டது. இந்துக்களின் ஒற்றுமையை எதிரொலித்து, தர்மம் வென்றது தற்போது சட்டத்தின் வாயிலாக நீதி வென்றுள்ளது.
Advertisement
Advertisement