திருச்செந்தூர் கோயிலில் விதிகள்படி அறங்காவலர் குழு உறுப்பினர்களை நியமிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு!!
மதுரை: திருச்செந்தூர் முருகன் கோயிலில் விதிகள்படி அறங்காவலர் குழு உறுப்பினர்களை நியமிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அறங்காவலர் குழு தலைவரை நியமித்து ஓராண்டாகியும் உறுப்பினர்களை நியமிக்காதது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், 4 மாதத்துக்குள் அறங்காவலர் குழு அமைக்காவிட்டால் நீதிமன்றமே உறுப்பினர்களை நியமிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அறங்காவலர் குழு நியமனம் செய்யப்படாதது சட்ட விதிகளை அவமதிக்கும் செயல் என ஐகோர்ட் கிளை தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement