தென்மேல்பாக்கம் எரியூட்டு மையத்தில் ரூ.1.25 கோடி மதிப்பிலான 833.5 கிலோ கஞ்சா அழிப்பு
Advertisement
இதில், கடந்த மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை கூடுவாஞ்சேரி மதுவிலக்கு அமலாக்க ப்பிரிவு, தாம்பரம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, பள்ளிக்கரணை மது விலக்கு அமலாக்கப்பிரிவு ஆகிய காவல்நிலையங்களில் 55 குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 833.5 கிலோ கஞ்சா எரித்து அழிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.1.25 கோடி என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், மதுவிலக்கு அமலாக்க பிரிவு உதவி ஆணையர் சத்தியசீலன், ஆய்வாளர்கள் சதீஷ், தினேஷ், ஸ்ரீதேவி மற்றும் போலீசார் உடனிருந்தனர்.
Advertisement