தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தேனிக்காரரை நம்பி இருக்கும் மூன்று எம்எல்ஏக்களின் தவிப்பு பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘மலராத கட்சி கூட்டணியில் இருந்து தேனிக்காரர் வெளியே வந்த நிலையில், அடுத்தது குக்கரர்காரர் தானாமே..’’ எனக்கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா.
Advertisement

‘‘மலராத கட்சியின் கூட்டணியில் இருந்து தேனிக்காரரை வெளியே கொண்டு வருவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டதாம்.. இலைக்கட்சி கூட்டணியில் தேனிக்காரர், குக்கர்காரர், சின்ன மம்மி என யாருமே இடம்பெற கூடாது என்பதுதான் இலைக்கட்சி தலைவரின் உறுதியான கட்டளையா இருக்குதாம்.. முதலில் சம்மதம் தெரிவித்த டெல்லி உள்துறை, கொஞ்சம் கொஞ்சமாக இலைக்கட்சி தலைவரை தங்களின் வழிக்கு கொண்டு வந்திடலாமுன்னு நினைச்சாங்களாம்.. தங்களுக்கும் செல்வாக்கு இருக்குன்னு காட்டும் வகையில் ரெண்டு மாநாடு போட்டு தங்களின் பலத்த நிரூபிச்சி காட்டுங்கன்னு டெல்லி, தேனிக்காரரிடம் சொன்னாங்களாம்.. இதற்கு தன்னிடம் துட்டு இல்லைன்னும், அவ்வளவு கூட்டத்தை தங்களால் கூட்டமுடியாதுன்னும் சொல்லிட்டாராம்.. தேனிக்காரரை உள்ளே கொண்டு வரும் திட்டத்தை தெரிந்து கிட்ட இலைக்கட்சி தலைவர், தனக்கு இருக்கும் செல்வாக்கை காட்டும் வகையில் ஊர் ஊராய் போய்கிட்டு இருக்காராம்.. முதற்கட்டமாக தேனிக்காரரை வெளியேற்றிய நிலையில், அடுத்தது குக்கர்காரர் தானாம்.. அதே நேரத்தில் மலராத கட்சியால் தொடர்ந்து அவமானம்.. கொட்ட கொட்ட எத்தனை நாள் தான் குனிந்து கொண்டே செல்வது என்று பலாப்பழத்து ஊர்க்காரர் தேனிக்காரரை உசுப்பேத்துனாராம்.. இதனால் மலராத கட்சியின் கூட்டணியில் இருந்து வெளியே வர தேனிக்காரர் முடிவு செஞ்சு அறிவிச்சாராம்.. அதுவும் முழுமனதோடு அவர் வெளியே வரலையாம்.. எந்நேரத்தில் மலராத கட்சி கூப்பிட்டாலும் உடனே ஓடிப்போய் ஒட்டிக்கிடும் எண்ணத்தில் தான் இருக்காராம்.. தேனிக்காரர் டெல்லியை காதலித்தார்.. டெல்லியோ இலைக்கட்சியுடன் தகாத உறவு வச்சிக்கிட்டு, காதலனை ஏமாற்றிவிட்டது. இந்த சோகத்தில் தான் காதலனான தேனிக்காரர் வெளியே வந்திருக்கார்.. காதலி எந்த நேரத்தில் அழைத்தாலும் தேனிக்காரர் ஓடிவிடுவார் என உடைந்து கிடந்த இலைக்கட்சியை ஒருங்கிணைக்க குழு அமைத்த பெங்களூரூக்காரர் சொல்றாரு... இதனால் தேனிக்காரரை நம்பி அவருடன் இருக்கும் எம்எல்ஏக்களும் தவிப்பில்தான் இருக்காங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ேசலத்துக்காரர் மீது கடும் ரெண்டாம் கட்ட தலைவர்கள் கடும் அதிருப்தியில் இருக்காங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘தமிழ்நாட்டுல இலைபார்ட்டிகள் தலைதூக்க முடியாத அளவுக்கு அவங்க கட்சிக்குள்ளவே ஏகப்பட்ட கோஷ்டி பிரிவுகளா இயங்கி வருது.. பெரும்பாலான மாவட்ட செயலாளருங்க கட்சிக்காரங்கள மதிக்கிறதே இல்லையாம்.. யாராவது இதைப்பற்றி கேட்டா எங்களை யாராலும் இனி மாற்ற முடியாது. உன்னோட வேலையப்பாருன்னு முகத்தில அடிச்சதுபோல பேசுறாங்களாம்.. இந்த நேரத்துல சேலத்துக்காரர் ஊர் ஊராக போய் மக்களை சந்திச்சு வர்றாரு.. சரி ேநர்ல வரும்போதாவது கட்சி நிலவரத்தை அவருக்கு எடுத்து சொல்லி, கட்சிய பலப்படுத்தலாம்னு ரத்தத்தின் ரத்தங்கள் நம்பிக்கையோட இருந்திருக்காங்க.. ஆனா, சேலத்துக்காரரோ போற இடத்துல எல்லாம், இலைபார்ட்டியில பழம் தின்னு கொட்டை போட்ட மாவட்ட செயலாளர் மற்றும் அவரோட சுத்தற ஓரிரு நிர்வாகிங்கள மட்டுமே சந்திச்சு கட்சியோட நிலைமை பற்றியும் உள்ளூர் அரசியல் நிலவரத்தை பற்றியும் கேட்குறாராம்.. இதுல கட்சியோட உண்மை நிலைய விளக்கி சொல்லலாம்னு காத்துக்கிட்டிருந்த 2ம் கட்ட தலைவர்களை சேலத்துக்காரர் கண்டுக்கவே இல்லையாம்.. இதனால கொதிச்சு போன 2ம் கட்ட தலைவருங்க, சேலத்துக்காரர் மேல கடுமையான அதிருப்தியில இருக்குறாங்களாம்.. கட்சி பிரச்னைகள கேட்டு தீர்க்காம எப்படி தேர்தல்ல ஒருங்கிணைந்து வேலை பார்க்கிறது? எல்லாத்தையும் வர்ற எலக்‌ஷன்ல காட்டியே தீருவோம்னு பேசிக்கிறாங்களாம்.. இருக்குற இலைய அவங்க கட்சிக்காரங்களே பிரிச்சு எடுத்துருவாங்க போல இருக்குதேன்னு விஷயம் தெரிஞ்சவங்க பேசிக்கிறாங்க..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘பங்கு போடப்பட்ட லஞ்சப்பணத்தை சிவில் கண்காணிச்சிட்டு வருதாமே எங்க..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.

‘‘புதுச்சேரியில் தேஜ கூட்டணி ஆட்சி நடக்கிறது.. ஆட்சிக்காலம் முடிவுக்கு வர சில மாதங்களே உள்ள நிலையில் லஞ்ச புகார்களில் அதிகாரிகள் சிக்குவது தொடர்கதையாகி வருது.. ஏற்கனவே பத்திரபதிவு, பொதுப்பணி, சுற்றுலா அதிகாரிகள் லஞ்ச வழக்கில் சிக்கி சிறைவாசம் சென்றாங்க.. இது ஒருபுறமிருக்க, சமீபத்தில் குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்த நபரிடம் துறை ஆய்வாளர் லஞ்சம் கேட்க கையும் களவுமாக லஞ்ச ஒழிப்புத்துறையால் சுற்றி வளைக்கப்பட்டாராம்.. உடந்தையாக இருந்த புரோக்கரும் மாட்டினாராம்.. இருவரிடமும் லஞ்ச ஒழிப்புத்துறை தனித்தனியாக கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதாம்.. இதில் சில அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளதாம்..

ஆய்வாளர் வாங்கிய லஞ்சப் பணத்தில் மேல்மட்டம் வரை பங்கு சென்றுள்ளதாம்.. தற்போது அந்த லிஸ்ட்டும் ரகசியமாக திரட்டப்படுகிறதாம்.. இதனால் சிவில் சப்ளையில், லஞ்ச ஒழிப்புத் துறையின் கண்காணிப்பு தொடர்கிறதாம்.. ஏற்கனவே இத்துறை மீது எழுந்த அடுக்கடுக்கான புகார்களால் அமைச்சரே பந்தாடப்பட்டார்.. தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அதிகாரிகள் லஞ்ச வழக்குகளில் அடுத்தடுத்து சிக்குவதால் ஆளும்தரப்பு புலம்பறாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘மான்செஸ்டர் மாவட்டத்திற்கு மாற்றலாகி செல்லும் அதிகாரிங்க எல்லாரும் சில நாட்களிலேயே ரிட்டன் பேக் அடிக்கிறாங்களாமே ஏன்..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘‘மான்செஸ்டர் மாவட்டத்திற்கு கனிமங்களை கவனிக்கும் துறைக்கு பணியாற்ற உயர் அதிகாரிகள் யாரும் முன்வருதில்லையாம்.. ஏற்கனவே இங்கு பணியாற்றி வந்த துணை இயக்குனர் சென்னைக்கு பணியிடம் மாற்றம் வாங்கிட்டு போயிட்டாராம்.. அதற்கு பதிலா லோகமான அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளாராம்.. பதவியேற்பதற்காக அலுவலகத்திற்கு வந்த அதிகாரி திடீர்னு பதவியேற்காமல் திரும்ப போய்விட்டாராம்.. தன்னோட செல்வாக்கை பயன்படுத்தி மான்செஸ்டரில் இருந்து குளுகுளு மாவட்டத்திற்கு ஆர்டரை வாங்கிட்டு சென்றுவிட்டாராம்.. மான்செஸ்டர் மாவட்டத்துல வேலை அதிகம் என்பதோடு சட்டவிரோத குவாரிகள் பிரச்னையை சமாளிக்க முடியாதுன்னு நினைச்சு இந்த முடிவு எடுத்ததா சொல்றாங்க.. மான்செஸ்டர் மாவட்டத்துல கனிம வளத்துறையில் ஏராளமான புகார்கள் இருக்கிறதால நமக்கு ஏன் வீண் வம்பு என்று பல அதிகாரிங்க பதவி ஏற்ற சில நாட்களிலேயே ரிட்டன் பேக் அடிக்கிறாங்களாம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.

Advertisement

Related News