சென்னை: கர்நாடகாஉள்துறை துணைச்செயலாளர் பி.கே.புவனேந்திர குமார் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், மாநிலத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் 200 ரூபாய்க்கு மேல் கட்டணம் இருக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளார். மல்டிபிளக்ஸ் உள்ளிட்ட அனைத்து வகையான திரையரங்குகளுக்கும், அனைத்து மொழி படங்களுக்கும் இந்த கட்டுப்பாடு பொருந்தும் என்றும், இதில், பொழுதுபோக்கு வரியும் அடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக கர்நாடகா திரையரங்குகள் ஒழுங்குமுறை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த எதிர்ப்பு அல்லது ஆலோசனைகளை தெரிவிக்க விரும்புவோர், 15 நாட்களுக்குள் தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.