திராவிடத்தின் தனித்துவம்
முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்களை தமிழ் நிலத்திற்கு தந்து ஒட்டு மொத்த தேசத்தின் கவனத்ைதயும் ஈர்த்திருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இதே போல், தொலைநோக்கு பார்வையோடு அயல்நாடுகளுக்கு பயணித்து, தொழில் முதலீடுகளை குவிக்கும் அவரது செயல்பாடுகளுக்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது. தமிழகத்தின் பொருளாதாரத்தை வரும் 2030ம் ஆண்டிற்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலராக மாற்றவேண்டும் என்ற இலக்கோடு, அவரது பயணம் தொடர்ந்து வருகிறது. இந்த வகையில், தற்போது இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு சென்று வியப்பூட்டும் தொழில் முதலீட்டு ஒப்பந்தங்களை பெற்றுள்ளார் நமது முதல்வர்.
மாநிலத்தின் மேம்பாட்டுக்காக அயல்நாடுகளுக்கு பயணப்படும் போதெல்லாம் தமிழர் பாரம்பரிய தனித்துவத்தையும் உணர்த்தி வருகிறார். தற்போது உலகப்பிரசித்தி ெபற்ற இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பகுத்தறிவு பகலவன் தந்தை ெபரியாரின் திருவுருவப்படத்தை திறந்து வைத்துள்ளார். இதன்மூலம் பெரியார் பெருமையோடு தமிழ்நிலப் ெபருமையும் உலகமயமாகி உள்ளது என்பதே நிதர்சனம். இத்தகு பெருமைக்கு மத்தியில், அவர் ஆற்றிய உரையும் வரலாற்று சிறப்பு மிக்கது என்கின்றனர் சமூக மேம்பாட்டு ஆர்வலர்கள். நூற்றாண்டுகளாக உலகின் சிறந்த அறிவாளிகளை உருவாக்கி தந்துள்ளது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்.
இந்த பல்கலைக்கழகத்தில் பேசுவதை நான் பெருமையாக கருதுகிறேன். நான் இங்கு தமிழக முதல்வர், தெற்காசியாவில் அரசியலை புரட்டிப்போட்ட திமு கழகத்தின் தலைவர் என்ற முறையில் மட்டும் வரவில்லை. பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் பேரன் என்ற கம்பீரத்துடன் உங்கள் முன்பு நிற்கிறேன். அவரது படத்தை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் திறந்து வைப்பதை எனது வாழ்நாள் பெருமையாக கருதுகிறேன். பகுத்தறிவு பட்டொளி உலகம் முழுவதும் பரவி வருகிறது என்பதன் அடையாளம் தான் இந்த படத்திறப்பு விழா. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அறிவின் அடையாளமாக மட்டுமன்றி, உரிமையின் அடையாளமாகவும் திகழ்கிறது.
அப்படிப்பட்ட இடத்தில் சமத்துவ பெரியாரின் படம் திறக்கப்பட்டுள்ளது. சுயமரியாதை இயக்கத்தின் தொடர்ச்சியாக இயங்கும் திமு கழகத்தின் தலைவர் பொறுப்பில் இருக்கும் எனக்கு, இதைவிட பெருமையாக வேறு எதுவும் இருக்க முடியாது. தந்தை பெரியாரின் கொள்ைக வாரிசு என்று நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறேன். ஒடுக்கப்பட்ட குடும்பங்களில் இருந்து, இங்கு வந்து நல்ல நிலையில் முன்னேறிய ஏராளமான மக்களை இங்கு காண முடிகிறது. அவர்களை போல் தமிழகமும் நல்ல முறையில் முன்னேறி வருகிறது. கல்வி, ெபாருளாதாரம், தொழில் வளர்ச்சி, வாழ்க்கைத்தரம், உட்கட்டமைப்பு வசதியில் முன்னேறி இருக்கிறோம். உலகத்தின் சாதனை உற்பத்தியாக மட்டுமே மாறி இருக்கிறது. அதேநேரத்தில் பட்டினிச்சாவு இல்லாத மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது.
இந்த வகையில் மற்ற மாநிலங்கள் வியந்து பார்க்கும் மாநிலமாக தமிழ்நாடு உயர்ந்து நிற்கிறது. இது தான் திராவிட இயக்கத்தின் சாதனை என்ற முதல்வரின் உரை, வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய ஒன்று. அதேநேரத்தில் ‘‘ஒரு இனத்திற்கே சுயமரியாதை உணர்வூட்டி தலைநிமிர வைத்த பெரும் ஆசான் தந்தை பெரியார். அவர் இந்த சமூகத்தில் விதைத்தது நாத்திகம் இல்லை, பகுத்தறிவு. அந்த பகுத்தறிவு மூலம் உருவாகும் சுயமரியாதை உணர்ச்சி தான், உலக மக்களையே ஒரு குடும்ப சகோதரர்களாக மாற்றும்,’’ என்பதையும் முதல்வர் அழுத்தமாக பதிவு செய்திருப்பது திராவிடத்தின் தனித்துவம்.