தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மானாமதுரையில் டீசல் நிரப்ப தொலைவில் நிறுத்தப்படும் ரயில்: பயணிகள் அவதி

Advertisement

மானாமதுரை: மானாமதுரை ரயில் நிலையத்தில் ராமேஸ்வரம் - மதுரை ரயில் இன்ஜினுக்கு டீசல் நிரப்ப நடைமேடையின் கடைசிப் பகுதியில் ரயில் நிறுத்தப்படுவதால் நீண்டதூரம் நடந்துசென்று ரயிலை பிடிக்க வேண்டியுள்ளதால் பயணிகள் அவதிப்படுகின்றனர். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வழியாக ராமேஸ்வரம், மதுரைக்கு தினமும் 3 பயணிகள் ரயில்கள் 6 முறை இயக்கப்படுகிறது. காலை, மதியம், இரவு வேளைகளில் இயக்கப்படும் ரயில்களில் ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை செல்லும் ரயிலுக்கு ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள பங்கில் டீசல் நிரப்புவது வழக்கம். கடந்த இருபது ஆண்டுகளாக இந்த நடைமுறையில் உள்ளது.

ராமேஸ்வரம், விருதுநகர் மார்க்கமாக வரும் அனைத்து எக்ஸ்பிரஸ், பயணிகள் ரயில்களின் என்ஜின்களுக்கு ஸ்டேஷன் அருகே வடக்கு முனையில் டீசல் நிரப்பப்படும். ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை செல்லும் பயணிகள் ரயில்களுக்கு நடைமேடை ஒன்று, நடைமேடை மூன்றில் டீசல் நிரப்பும் வசதி உள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து காலை 8 மணிக்கும், மதியம் 1.50 மணிக்கும், இரவு 8.15 மணிக்கும் மதுரை செல்லும் ரயில்களுக்கு முழு கொள்ளளவு நிரம்பும் வரை டீசல் பிடிக்கப்படும். இதனால் இந்த இஞ்சின்கள் மறுமார்க்கமாக காலை 7.55 மணிக்கும், மதியம் 2.50 மணிக்கும், இரவு 7.15 மணிக்கும் திரும்பி செல்லும்போது டீசல் நிரப்புவது இல்லை.

பல ஆண்டுகளாக இருந்த நடைமுறை சமீப காலமாக தலை கீழாக மாற்றப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக ரயில் நிலையத்தின் கடைசியில் உள்ள எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு டீசல் நிரப்பும் தெற்கு பகுதியில் பயணிகள் ரயில்களுக்கு டீசல் நிரப்பப்படுகிறது. இதற்காக வழக்கமாக ஸ்டேஷன் அருகில் பயணிகள் ரயில் நிற்பதற்கு பதிலாக ஸ்டேஷனில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் நிற்பதால் முதியோர், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள் வேகமாக ஓடிச்சென்று ரயிலை பிடிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.

இது குறித்து ரயில் பயணிகள் சங்க நிர்வாகி அப்துல்கரீம் கூறுகையில், `பயணிகள் ரயில் 10 பெட்டிகளுடன் இயக்கப்படுவதால் ரயில் நிலைய நுழைவு வாயில் அருகில் நிறுத்தப்படும். தற்ேபாது டீசலுக்காக ெதாலைவில் நிறுத்தப்படுவதால் ரயிலில் ஏறுவதற்கும் மதுரையில் இருந்து வரும் பயணிகள் இறங்கி நடந்து ஸ்டேஷனுக்குள் வருவதற்கும் நீண்ட தொலைவு நடந்து செல்ல வேண்டியுள்ளது. எனவே பழைய முறைப்படி மதுரை செல்லும் போதே ரயில் இஞ்சினுக்கு டீசல் நிரப்ப மதுரை கோட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

Advertisement

Related News