நாளை வரலட்சுமி நோன்பு எதிரொலி: பூக்கள் விலை 2 மடங்கு உயர்ந்தது
அண்ணாநகர்: நாளை வரலட்சுமி நோன்பு கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலை இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. ஒரு கிலோ மல்லி 500 ரூபாயில் இருந்து 1000க்கும் ஐஸ் மல்லி 400 ரூபாயில் இருந்து 800க்கும் முல்லை மற்றும் ஜாதிமல்லி 400 ல் இருந்து 800க்கும் கனகாம்பரம் 800ல் இருந்து 1000க்கும் அரளி பூ 300 இருந்து 600க்கும் சாமந்தி 200ல் இருந்து 240க்கும் சம்பங்கி 100 இருந்து 200க்கும் பன்னீர் ரோஸ் 120 இருந்து 200க்கும் சாக்லேட் ரோஸ் 160ல் இருந்து 240க்கும் தாமரைப்பூ 5 ரூபாயில் இருந்து 50க்கும் தாழம்பூ 50 இருந்து 300க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பூ மார்க்கெட் துணை தலைவர் முத்துராஜ் கூறுகையில், ‘’மார்க்கெட்டில் கடந்த 5ம்தேதி மழையின் காரணமாக அனைத்து பூக்களின் விலை சற்று உயர்ந்தது. நாளை வரலட்சுமி நோன்பு முன்னிட்டு அனைத்து பூக்களின் விலை இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு இன்னும் 3 நாட்கள் நீடிக்கும்.