செப்.2 ம் தேதி சென்னை வருகிறார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு: ட்ரோன் பறக்க தடை
சென்னை: செப்.2 ம் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சென்னை வருகிறார். மாண்புமிகு இந்தியக் குடியரசுத் தலைவர் செப்.2, 3 ஆகிய இரண்டு 2 சென்னைக்கு வருகை தந்து 2ம் தேதி மதியம் நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்ளவுள்ளார். 3ம் தேதி IAF BBJ விமானம் மூலம் சென்னையிலிருந்து திருச்சிக்கு புறப்படவுள்ளார். வி.வி.ஐ.பி. அவர்கள் கிண்டியில் உள்ள ராஜ் பவனில் தங்கவுள்ளார்.
2023 ஆம் ஆண்டு பாரதிய நாகரிக் சுரக்க்ஷா சன்ஹிதா பிரிவு 163-ன் கீழும், 2023 ஆம் ஆண்டு பாரதிய நாகரிக் சுரக்க்ஷா சன்ஹிதா பிரிவு 14-ன் உட்பிரிவு (2) கீழும், ட்ரோன்கள், ரிமோட் மூலம் இயக்கப்படும் மைக்ரோ லைட் ஏர்கிராப்ட் பாரா கிளைடர்ஸ், பாரா மோட்டார்ஸ், ஹேன்ட் கிளைடர்ஸ், ஹாட் ஏர் பலூன்கள் போன்றவற்றை சென்னை பெருநகரில் பறக்க விட 23-8-2025 முதல் வரை தடைசெய்யப்பட்ட ஆணை ஏற்கனவே 21-10-2025 நடைமுறையில் உள்ளது.
எனவே, பாதுகாப்பு அலுவலின் பொருட்டு சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளான, சென்னை விமான நிலையம், சென்னை வர்த்தக மையம் (நந்தம்பாக்கம்), ராஜ் பவன் மற்றும் இந்திய குடியரசு தலைவரின் வாகனம் செல்லும் வழித்தடங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு (RED ZONE), அந்த பகுதிகளில் ட்ரோன் கேமராக்கள் (DRONE CAMERAS) மற்றும் எந்தவிதமான பறக்கும் பொருட்கள் பறக்கவிட, செப்.2, 3 ஆகிய இரு நாட்கள் உட்பட, மேற்குறிப்பிட்டவாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.