தனியாக வாக்கிங் சென்றபடி ஆய்வு செய்த கலெக்டர்: ஈரோட்டில் பரபரப்பு
Advertisement
ஈரோடு: ஈரோடு மாவட்ட கலெக்டராக எஸ்.கந்தசாமி கடந்த மாதம் 27ம் தேதி பொறுப்பேற்றார். தொடர்ந்து, மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை நேரில் ஆய்வு செய்து வருகிறார். இந்நிலையில், கலெக்டர் கந்தசாமி, இன்று காலை அவரது முகாம் அலுவலகத்தில் இருந்து எவ்வித பாதுகாப்பும் இன்றி, தனி நபராக மாநகர சாலைகளில் மக்களில் ஒருவரைபோல, ‘வாக்கிங்’ சென்றார்.
அப்போது, நகரின் தூய்மை மற்றும் சுகாதார பணிகளை ஆய்வு மேற்கொண்டார். கலெக்டரை அடையாளம் கண்டு, அவ்வழியாக சென்ற மக்கள் அவருக்கு வணக்கம் கூறினர். பதிலுக்கு கலெக்டரும் வணக்கம் கூறி தொடர்ந்து வாக்கிங் சென்றார்.
Advertisement