சமூக நீதியின் உண்மையான தலைவர் பிரதமர் மோடி: எல்.முருகன் பேட்டி
Advertisement
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
பீகார், தெலங்கானாவில் ஏற்கனவே ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடி ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுகின்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளதை தொடர்ந்து நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. பிரதமர் மோடி சமூக நீதியின் உண்மையான தலைவராக இருந்து வருகிறார். யாருக்கும், எந்த மாநிலத்திற்கும் பாதகம் இல்லாமல் தொகுதிகள் மறுசீரமைக்கப்படும் என பிரதமர் தெளிவாக கூறி விட்டார். இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement