தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மேற்கு என்ற பெயரில் தீவிர போர் பயிற்சி மேற்கொள்ளும் ரஷ்யா: ஐரோப்பிய நாடுகள் அச்சம்

ரஷ்யா: பெலாரஸ் நாட்டுடன் இணைந்து ரஷ்ய ராணுவ படைகள் தீவிர போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் ஒளியைவிட வேகமாக செல்லக்கூடிய ஏவுகணைகளை வீசி ரஷ்யா சோதனை நடத்தியுள்ள சம்பவம் ஐரோப்பிய நாடுகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளை கடந்தும் தற்போது வரை நீடித்து வருகிறது. நாளுக்கு நாள் உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தி வருகிறது. உக்ரைனில் மக்கள் வசிக்கும் குடியிருப்புகள், மருத்துவ மனைகள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் பலியாகி வருகின்றனர். இரு தரப்பு போரை முடிவுக்கு கொண்டுவர உலக தலைவர்கள் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

Advertisement

இந்த நிலையில் உக்ரைன் ரஷ்யா போரை நிறுத்த அமெரிக்கா அதிபர் டிரம்ப் களமிறங்கி பேசிக்குவார்த்தை நடத்தினார். இதனை பொருட்படுத்தாத ரஷ்யா தொடர்ந்து வான்வழி தாக்குதல் மட்டுமின்றி தரைவழி தாக்குதல்களையும் நடத்தி வருகிறது. இதனால் கடுப்பான டிரம்ப் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நேட்டோ நாடுகள் உடனடியாக நிறுத்தி கொள்ள வேண்டும் என்றும் போர் நிறுத்தத்திற்கு ரஷ்யாவை இணங்க செய்தது ஐரோப்பிய நாடுகளின் பொறுப்பு எனவும் பேசியிருந்தார். இதற்கிடையில் ரஷ்யாவிற்கும், உக்ரைனுக்கும் சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டால் பாதுகாப்பு உத்தரவாதமாக போரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு ராணுவ வீரர்களை அனுப்புவதாக 26 நாடுகள் உறுதி அளித்திருப்பதாக பிரான்ஸ் அதிபர் தெரிவித்திருந்தார் .

அதே சமயம் போர் முடிந்த பிறகும் உக்ரைனின் பாதுகாப்புக்காக பல நாடுகளின் ராணுவ படைகளை ரஷ்யாவுக்கு அனுப்புவதற்கான திட்டங்களை வகுத்து வருவதாக ஐரோப்பிய யூனியன் தலைவர்தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் குறித்து பேசிய ரஷ்யா அதிபர் புடின், அமைதி ஒப்பந்தம் ஏற்படுவதற்கு முன் உக்ரைனில் அமைதிகாக்கும் படைகளை நிறுத்த கூடாது என்றும் அப்படி வெளிநாடு படைகள் ரஷ்யாவில் நிறுத்தப்பட்டால் அது திருசியாவின் சட்ட பூர்வ இலக்காக இருக்கும் என்றும் எச்சரித்திருந்தார். இதற்கிடையில் மேற்கு என்ற பெயரில் தீவிர போர் பயிற்சியை ரஷ்யா மேற்கொண்டு வருகிறது. ரஷ்யாவிற்கு எதிராக ஐரோப்பிய நாடுகள் திரும்பும் பரபரப்பான சூழலில் பெலாரஸ் நாட்டுடன் இணைந்து ரஷ்யா ராணுவ படைகள் தீவிர போர் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன.

இந்த போர் பயிற்சியில் அதிநவீன போர் விமானங்கள், ஏவுகணைகள், கப்பல்கள் எடுபட்டு வருகின்றன. ஒளியைவிட வேகமாக செல்ல கூடிய ஏவுகணைகளை ஏவி ரஷ்யா சோதனை நடத்தி உள்ளது. ரஷ்யா, பெலாரஸ் நாடுகளில் திடீர் போர் பயிற்சி தங்களை தாக்குவதற்கான ஒத்திகை என்று ஐரோப்பிய நாடுகள் அச்சம் தெரிவித்துள்ளனர். ரஷ்யாவின் மேற்கு பகுதியில் ஐரோப்பா உள்ள நிலையில் இப்பயிற்சிக்கு மேற்கு என்று ரஷ்யா பெயர் வைத்துள்ளதால் ஐரோப்பிய நாடுகள் மீது ரஷ்யா போர் தொடுக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ரஷ்யாவின் இந்த திடீர் போர் பயிற்சியால் ரஷ்யாவிற்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

Advertisement

Related News