அரசியலில் சில தவறுகளை செய்துள்ளேன்; நான் செய்த தவறுகளில் ஒன்று அன்புமணியை ஒன்றிய அமைச்சராக்கியது: ராமதாஸ் பேட்டி
திண்டிவனம்: நான் செய்த தவறுகளில் ஒன்று அன்புமணியை ஒன்றிய அமைச்சராக்கியது என தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேட்டி அளித்து வருகிறார். அன்புமணி தலைமையில் ஒரு கும்பல் செயல்பட்டு வருகிறது. அரசியலில் சில தவறுகளை நான் செய்ததுண்டு. நான் செய்த தவறுகளில் ஒன்று அன்புமணியை ஒன்றிய அமைச்சராக்கியது. மற்றொரு தவறு அன்புமணிக்கு கட்சித் தலைவர் பதவியை கொடுத்தது. பாமகவில் ஒரு பிளவு ஏற்பட்டுள்ளதாக மற்றவர்கள் நினைக்கும் அளவுக்கு அன்புமணியின் பேச்சும் செயல்பாடும் அமைந்துள்ளது என தெரிவித்தார். அன்புமணியின் பேச்சும் செயலும் அருவருக்கத்தக்கதாக உள்ளது. அன்புமணி கும்பல் பற்றி சொன்னால் வளர்ப்பு சரியில்லை என்பீர்கள் என தெரிவித்தார்.
Advertisement
Advertisement