காட்டு யானை ராதா கிருஷ்ணனைப் பிடிக்கும் பணி 7வது நாளாக தொடர்கிறது!!
நீலகிரி: கூடலூர் அருகே கடந்த 7 ஆண்டுகளில் 12 பேர் உயிரிழப்புக்கு காரணமான, ராதாகிருஷ்ணன் என்ற காட்டு யானையைப் பிடிக்க வனத்துறை தீவிரம் காட்டி வருகின்றனர். அடர் புதர்ப் பகுதியில் யானை இருப்பதால், அதனை சமவெளிக்கு விரட்டும் பணி நடக்கிறது. 4 கும்கி யானைகள், ட்ரோன் கேமராக்கள், மயக்க ஊசி கொண்டு 50க்கும் மேற்பட்ட வனத்துறை காவலர்கள் காட்டு யானையைப் பிடிக்கும் பணியில் உள்ளனர்.
Advertisement
Advertisement