தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பள்ளிக்கல்வித்துறை சார்பில் “A Sun from the south” என்னும் நூலினை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: பள்ளிக்கல்வித்துறை சார்பில் “A Sun from the south” என்னும் நூலினை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (24.10.2025) தலைமைச் செயலகத்தில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் “A Sun from the south” என்னும் நூலினை வெளியிட்டார். இந்நூலினை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் தனது ‘திசைதோறும் திராவிடம்’ திட்டத்தின்கீழ், கே.எஸ்.எல். மீடியா-வுடன் இணைந்து கூட்டு வெளியீடாக வெளியிடுகிறது.

Advertisement

“A Sun from the South” என்னும் இந்நூல் கலைஞரின் ஆளுமையை திராவிட இயக்கத்தோடு இணைத்துக் காணும் அதே வேளையில் இந்தியாவின் சமகால வரலாற்றை, அரசியலை தெற்கிலிருந்து ஆராய ஊக்கமும் உற்சாகமும் தரும் விதமாக தொகுக்கப்பட்டுள்ளது. “தெற்கிலிருந்து ஒரு சூரியன்” என்னும் பெயரில் முன்னர் வெளிவந்த தமிழ் நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான இது, மூலநூலைப் படிக்கும் அதே விறுவிறுப்போடு வாசகர்களைக் கவரும் விதமாகக் கூடுதல் கவனம் செலுத்தி எழுதப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் மரு.பி. சந்தரமோகன், இ.ஆ.ப., தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ. லியோனி, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேலாண்மை இயக்குநர் (பொறுப்பு) மரு. மா. ஆர்த்தி, இ.ஆ.ப., மற்றும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக உதவி இயக்குநர் முனைவர் ப. சரவணன் மற்றும் இந்து தமிழ்த்திசை துணை ஆசிரியர் எ.வள்ளியப்பன், புத்தக மொழிபெயர்ப்பாளர் விஜயசங்கர் ஆகியோர் கலந்துகொண்டனர் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Advertisement

Related News