தாயுமானவர் திட்டத்தை சென்னையில் உள்ள பயனாளியின் இல்லத்திற்கு சென்று தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
சென்னை: வீடுகளுக்கு ரேஷன் பொருள்களை தரும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள பயனாளியின் இல்லத்திற்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடிச் சென்று ரேஷன் பொருள்களை விநியோகிக்க திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு மாதமும் 2வது சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வீடு தேடி சென்று ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படும். திட்டம் மூலம் 34,809 நியாய விலைக் கடைகளில் உள்ள 20,42,857 மூத்த குடிமக்கள் பயன் பெறுவர்.