தஞ்சை காசநோய் மருத்துவமனையை புனரமைக்க எவ்வளவு செலவாகும்: ஐகோர்ட் கிளை கேள்வி
மதுரை: தஞ்சை காசநோய் மருத்துவமனையை புனரமைக்க எவ்வளவு செலவாகும்? என உயர்நீதியாமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. பூதலூரைச் சேர்ந்த தேவதாஸ் என்பவர், மருத்துவமனைக்கு சொந்தமான 220 ஏக்கர் நிலத்தை சிப்காட் நிறுவனத்துக்கு மாற்ற தடை கோரி ஐகோர்ட் கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் மருத்துவமனையை புனரமைத்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த வழக்கு விசாரணையில், என்னென்ன முறையில் புனரமைப்பை செய்யலாம் என மனுதாரர் தரப்பில் பதில் தர ஐகோர்ட் கிளை ஆணையிட்டுள்ளது.