தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தஞ்சை மாவட்டத்தில் 2.24 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது: நுகர்பொருள் வாணிபக் கழகம்

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் 2.24 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்று நுகர்பொருள் வாணிபக் கழகம் தகவல் தெரிவித்துள்ளது. தஞ்சை மாவட்டத்தில் மேலும் 50,000 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய வாய்ப்பு உள்ளது. தஞ்சையில் 2024ல் 1.28 லட்சம் மெ.டன் கொள்முதல் ஆன நிலையில் தற்போது 86,000 மெட்ரிக் டன் கூடுதலாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 44,286 விவசாயிகளுக்கு ரூ.541 கோடி ஆன்லைன் மூலம் பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் இன்னும் 10 நாளில் நெல் கொள்முதல் பணிகள் நிறைவடையும்.
இந்த ஆண்டு சுமார் 6.50 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்யப்பட்டிருந்தது. முன் எப்போதும் இல்லாத வகையில் விளைச்சலும் அமோகம். இந்நிலையில் அறுவடை செய்த நெல் கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லுடன் பல நாள்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த மாதத்தில் நெல்கொள்முதலில் அதிகமாக கொள்முதல் செய்யப்பட்டு சாதனை படைத்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்ய மாவட்டம் முழுவதும் 299 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில், தஞ்சையில் இந்த ஆண்டு சுமார் 1 லட்சத்து 99 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை நடவுப்பணிகள் முடிந்து, தற்போது வரை ஒரு லட்சத்து 60 ஆயிரம் ஏக்கர் அறுவடை பணிகள் நிறைவடைந்துள்ளன.
தமிழ்நாடு விவசாய அறுவடை இல்லாத காலத்திலும் நெல் கொள்முதலில் தொடர்ந்து வளர்ச்சி காண்கிறது. 2021-22ல்,நெல் கொள்முதல் மொத்த கொள்முதலில் 15.94% ஆக இருந்தது. 2024-25ல், இது 41.02% ஆக உயர்ந்துள்ளது.
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து கிடைப்பது. Lean Seasonல்  நெல் கொள்முதல் மையங்கள் (DPCs) மாநிலம் முழுவதும் இயக்கப்படுவது. குறுவை மற்றும் சம்பா சாகுபடி பருவங்களின் விளைச்சலைத் தொடர்ந்து, நெல் கொள்முதல் மையங்களின் செயல்திறன் உயர்ந்துள்ளது. அறுவடைக்கு முந்தைய மற்றும் அறுவடைக்குப் பிந்தைய நெல் உற்பத்தியில் ஏற்பட்ட முறையான மாற்றங்கள். விவசாயத்தில் இயந்திரமயமாக்கல் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தில் 2.24 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் மேலும் 50,000 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய வாய்ப்பு உள்ளது. இதுவரை 44,286 விவசாயிகளுக்கு ரூ.541 கோடி ஆன்லைன் மூலம் பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது
Advertisement
Advertisement

Related News