தஞ்சாவூர் பிள்ளையார்பட்டியில் நெல் கொள்முதல் நிலையத்தில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆய்வு..!!
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பிள்ளையார்பட்டியில் நெல் கொள்முதல் நிலையத்தில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆய்வு மேற்கொண்டார். அவருடன் அமைச்சர்கள் கோவி.செழியன், மெய்யநாதன் ஆகியோரும் ஆய்வு மேற்கொண்டனர். தஞ்சையில் நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு செய்த பிறகு அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், 162 நேரடி கொள்முதல் நிலையம் தான் செயல்பட்டது. இந்த ஆண்டு 16லட்சம் மெட்ரிக் டன் இதுவரை நெல் கொள்முதல் செய்யப்பட்டிருக்கிறது.
சென்ற ஆண்டு 1.28 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த ஆண்டு சாகுபடி பரப்பு சுமார் 79,800 ஹெக்டர் சென்ற ஆண்டு இதே காலகட்டத்தில் 61,000 ஹெக்டரில் நெல் பயிரிடப்பட்டது. இன்றைய காலகட்டத்தில் 1,250 நெல் மூட்டைகளை தினந்தோறும் லாரிகளில் வெளிமாவட்டங்களுக்கு அனுப்பப்படுகின்றன. அத்துடன் 4 லாரி அதாவது ரயில் மூலமாக வேக்கன் மூலமாக 8000 மூட்டைகள் தினந்தோறும் அனுப்பப்பட்டு வருகிறது. இன்னும் 8,600 ஹெக்டேர் அறுவடைக்கு தயாராக உள்ளது. 50,000 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்படவுள்ளது.
சாக்கை பொறுத்தளவில் 14 லட்சம் சாக்கு கையில் உள்ளது. 66 லட்சம் சாக்கு வந்து கொண்டு இருக்கிறது. 100பேல் சனல் இருப்பில் உள்ளது. மீதம் சனல்களை வாங்குவதற்காக மேலாண்மை இயக்குனர் அனைத்து ஆர்எம்எஸ்ஆர்எக்கு அனுமதி கொடுத்திருக்கிறார். நான்கு வாடகைக்கு எடுக்கப்பட்ட கப்போர்டு குடோனில் 30,000 மேட்ரிக்டன் வைக்கப்பட்டுள்ளது. ஒரத்தநாட்டில் ஒரு லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கு அமைக்க டெண்டர் வழங்கப்பட்டுள்ளது. ஒரத்தநாட்டில் தினமும் 5,000 மூட்டை கொள்முதலுக்காக தானியங்கி இயந்திரம் சோதனை முறையில் தொடங்கப்பட்டுள்ளது.
இன்னும் 5 இடங்களில் மெகா டிபிசி திறக்கப்படும் என்று சட்டமன்றத்திலே முதலமைச்சர் உத்தரவை பெற்று அறிவித்திருக்கிறேன். அது விரைவில் பயன்பாட்டுக்கு வரும். முதலமைச்சர் பொறுப்பேற்ற பின்பு அந்த 800 முட்டையிலிருந்து 1000 மூட்டை என்பதை அரசாங்க உத்தரவாகவும் அதோடு ஒரு ஏக்கர் 60 முட்டையிலிருந்து 70 மூட்டை வாங்குவதற்கான விவசாயிகளின் கோரிக்கை ஏற்கப்பட்டு அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை கடந்த 10 ஆண்டுகளாக கொடுக்கப்படவில்லை. நெல்லுக்கான ஆதார விலை உயர்த்தப்பட்டுள்ளது; 3 மடங்கு வரை கூடுதலாக விளைச்சல் அதிகம்.9 லட்சம் டன்னுக்கு மேல் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.