தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தஞ்சாவூரை அடுத்த காராமணிதோப்பு பகுதியில் பீர்க்கங்காய் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

Advertisement

தஞ்சாவூர் : தஞ்சாவூரை அடுத்த காராமணிதோப்பு பகுதியில் பீர்க்கங்காய் சாகுபடி நடைபெற்று வருகிறது.தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிகபடியான இடங்களில் நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. நெல்லுக்கு அடுத்தப்படியாக எள், கரும்பு, சோளம், பயிறு, வாழை, வெற்றிலை உள்ளிட்ட விவசாயம் நடைபெறும். ஒரு சிலர் காய்கறிகளான வெண்டைக்காய், பாகற்காய், புடலங்காய், சுரக்காய், பீர்க்கங்காய், அவரை, சுண்டை, கீரை வகைகள், பூ வகைகள் உள்ளிட்டவற்றை சாகுபடி செய்து வருகின்றனர்.

அவர்கள் தோட்டத்தில் விளையும் காய்கறி மற்றும் கீரைகளை அறுவடை செய்து அருகில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் சென்று விற்பனை செய்வது வழக்கம். அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டம் மருங்குளம் பகுதியை அடுத்த காராமணிதோப்பு பகுதியில் பீர்க்கங்காய் சாகுபடியில் ஒரு சில விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதுகுறித்து பீர்க்கங்காய் விவசாயி கூறுகையில், பீர்க்கங்காய் சாகுபடியை விவசாயிகள் இப்பகுதியில் பெரும்பாலும் செய்வதில்லை. பீர்க்கங்காய் இனிப்பு தன்மை நிறைந்துள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு. இதனால் பூச்சி தாக்குதல் ஏற்பட்டு சாகுபடி பாதிப்பதால் பீர்க்கங்காய் சாகுபடியில் நிறைய பாதிப்புகள் ஏற்படுகிறது. நாங்கள் 2 ஆண்டுகளாக காய்கறிச் சாகுபடிகளை செய்து வருகிறேன். நிறைய காய்கறிகளை சாகுபடி செய்து வருகிறேன்.

அதற்கு காரணம் அன்றாடம் வருமானம் கிடைப்பதால் மட்டுமே. பொதுவாக எந்த பயிராக இருந்தாலும் நோய் தாக்குதல் இருக்கும். அதுபோல தான் பீர்க்கங்காய் சாகுபடியும். காய்கறி சாகுபடியில் நிச்சயம் ஏற்படும். ஆனால் அதனைக் கட்டுப்படுத்த முடியும். அதற்கு நான் ஆர்கானிக் முறையை பயன்படுத்தி வருகிறேன். இருந்தாலும் பருவமலைத் தவறி வருவதால் காய் வளர்வதில் சிக்கல் ஏற்படுகிறது.

நிலத்தை தயார்படுத்தி பார் அமைத்து இரண்டடிக்கு ஒரு விதை என பதியம் போட வேண்டும். விதை நட்ட ஐந்து நாளில் செடி வளர்ந்து விடும், பிறகு 15 இல் இருந்து 20 நாளில் கொடி மேல் வளர ஆரம்பித்து விடும். பந்தல் முறையில் செய்யப்படும் இந்த சாகுபடியில்.

கொடி ஏறுவதற்கு கயிறை சரியான அளவில் கட்ட வேண்டும். 40 நாளில் காய் வளர ஆரம்பிக்கும்.

ஆர்கானிக் முறையில் மாட்டு கோமியம், மஞ்சள் பொடி, தயிர் ஆகியவற்றை ஊறவைத்து தெளிப்பதன் மூலம் பூச்சி தாக்குதலைக் கட்டுப்படுத்த முடியும்.

ஆனால் பருவமழை தவறி பெய்து வருவதால், காய் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படுகிறது. மூன்று மாத பயிரான பீர்க்கங்காயில் தற்போது ஒரு நாளைக்கு 40 கிலோ வரை அறுவடை செய்கிறேன். அடுத்த இரண்டு மாதத்தில் ஒரு நாளைக்கு 200 கிலோ வரை காய் கிடைக்கும். பீர்க்கங்காய் சாகுபடி ஆணி 15 தேதி வாக்கில் பதியம் துவங்கினால், ஆடி மாதம் இறுதியில் அறுவடை தொடங்கும்.

நம்ம உழைத்து மற்றொருவரிடம் கொடுப்பது என்னைப் பொறுத்தவரையில் சரியானது அல்ல. என்னால் முடியும் வரை நானே சென்று மக்களிடம் நேரடியாக விற்பேன். நான் காய்கறி சாகுபடி என துவங்கிய நாளிலிருந்து தற்போது வரை மக்களிடம் நானே நேரடியாக விற்பனை செய்து வருகிறேன். வியாபாரியிடம் கொடுத்தால் மிகவும் குறைவான விலைக்கு செல்லும். வியாபாரிகளிடம் கிலோ பத்துக்கு கொடுத்தாள் அவர்கள் ரூ.40க்கு விற்பனை செய்வார்கள். இதில் எனக்கு லாபம் ஈட்ட‌முடியாது.

அதனால் நானே மக்களிடம் நேரடியாக ரூ.10 குறைத்து ரூ.30 விற்பனை செய்துவிடுவேன்‌. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பகுதிக்குச் செல்வேன்.சில நேரம் காய்கறி நல்ல விலைக்கு போகும். செலவை பொருத்தவரையில் 100 குழியில் எனக்கு 30 ஆயிரம் செலவானது. மூன்று மாதத்தில் 80லிருந்து 1 லட்சம் வரை லாபம் கிடைக்கும். குறைந்த அளவில் நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் மற்ற சாகுபடி செய்வதை விட இது போன்ற காய்கறி சாகுபடி செய்வது அன்றாட செலவிற்கும், நிறைவான லாபத்தையும் ஈட்டித் தரும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Related News