தங்கச்சிமடத்தில் மீனவர்கள் ரயில் மறியல்..!!
ராமேஸ்வரம்: தங்கச்சிமடத்தில் மீனவர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது. இலங்கை படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள், படகுகளை விடுவிக்க கோரி மீனவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்கச்சிமடத்தில் தண்டவாளத்தில் அமர்ந்து மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ராமேஸ்வரம் மீனவர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
Advertisement
Advertisement