தாமிரபரணி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!!
Advertisement
நெல்லை: மிக கனமழைக்கான எச்சரிக்கையை அடுத்து தாமிரபரணி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மருதூர், திருவைகுண்டம், அணைக்கட்டு உள்ளிட்ட தாமிரபரணி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டது. தாமிரபரணி ஆற்றில் யாரும் இறங்கவோ, குளிக்கவோ கூடாது என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். அனைத்து நீர்நிலைகளையும் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
Advertisement