தாமல் ஏரியிலிருந்து 400 கன அடி நீர் திறப்பு: வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சி மையப்பகுதியில் 7 கி.மீ. பயணிக்கும் வேகவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாமல் ஏரியிலிருந்து 400 கன அடி நீர் ஆற்றில் திறப்பதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர் மழை, பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் நீர் நிலைகள் வேகமாக நிரம்பியது. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
                 Advertisement 
                
 
            
        
                 Advertisement