தலையாறு அருவி பகுதியில் ஆபத்தான பாறைகளின் இடுக்குகளில் தவழ்ந்து செல்லும் இளைஞர்கள்: வனத்துறையினர் கண்காணிக்க கோரிக்கை
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது. கொடைக்கானலில் பல்வேறு சுற்றுலா தலங்கள் இருந்து வரக்கூடிய நிலையில் வத்தலகுண்டு இருந்து கொடைக்கானல் பிரதான சாலையில் முகப்பு பகுதியிலேயே அமைந்திருப்பது தான் இந்த தலையாறு அருவி தமிழ்நாட்டின் மிக உயரமான அருவியாக கருதப்படக் கூடிய இந்த தலையாறு அருவிக்கு எலிவால் அருவி என்றும் பெயர் உண்டு. சுமார் 975 அடி உள்ள இந்த அருவி தமிழகத்தில் மிக உயரமான அருவியாக பார்க்கப்படுகிறது.
கரும்பறைகள் மீது இருந்து விழக்கூடிய தண்ணீர் எலியின் வாழ்தோற்றத்தில் இருப்பதால் இது எலிவால் அருவி என்றும் அழைக்கப்படுகிறது...கொடைக்கானல் வத்தலகுண்டு சாலையில் பயணிக்க கூடிய சுற்றுலா பயணிகள் முதலில் பார்ப்பது இந்த தலையாறு அருவியை தான் டம் டம் பாறை என்ற இடத்தின் மேற்கே அடர்ந்த வனப்பகுதியில் அமைந்திருக்க கூடிய தலையாறு அருவியை சாலையில் இருந்து மட்டுமே பார்க்க முடியும்.
இந்த அருவியை அருகில் இருந்து பார்க்க வேண்டும் என்றால் அடர்ந்த வனப்பகுதிக்குள் உள்ள பாறைகள் மற்றும் ஆபத்தான வனப்பகுதியை தாண்டி மட்டுமே செல்ல முடியும் இதற்கு வனத்துறையினர் அனுமதி அளிப்பதில்லை. இந்நிலையில் சமூக வலைத்தளங்கள் ஆன இன்ஸ்டாகிராம் , யூடியூப் போன்ற பக்கங்களில் தங்களை பிரபலம் அடைய செய்ய வேண்டும் என நினைத்து சில இளைஞர்கள் தலையாறு அருவி பகுதிக்கு செல்லும் வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி உள்ளது.
டம் டம் பாறை மேற்கே உள்ள தலையாறு அருவிக்கு செல்வதற்கு அடர்ந்த வனப் பகுதிகளில் உள்ள பாறைகளில் இடுக்குகளை தவழ்ந்து செல்வது போன்று, உயரமான பாறைகளில் இருந்து ஒரு பாறையில் இருந்து மற்றொரு பாறைக்கு தாண்டுவது மற்றும் அடர்ந்த பணப் பகுதிக்குள் ஆபத்தான பயணத்தை மேற்கொள்வது போன்ற வீடியோ காட்சிகளை தாங்கள் பிரபலமடைய வேண்டும் என நினைத்து சில இளைஞர்கள் சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர்.
இந்த காட்சிகள் தற்போது வைரல் ஆகி உள்ளது மேலும் இளைஞர்கள் அத்திமீறி செல்லக்கூடிய இந்த காட்சிகளால் மற்ற சுற்றுலா பயணிகளும் ஆபத்தான பாதையை நாடி செல்வதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் இந்த காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும் என்ற கோரிக்கை இழந்துள்ளது மேலும் ஆபத்தான சுற்றுலா செய்யக்கூடிய இளைஞர்களை வனத்துறையினர் கண்காணிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.